2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

IWMI உடன் Fairfirst இன்சூரன்ஸ் கைகோர்ப்பு

Editorial   / 2018 மார்ச் 28 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நீர் முகாமைத்துவ கல்வியகத்துடன் (IWMI), Fairfirst இன்சூரன்ஸ் கைகோர்த்து, விவசாயக் காப்புறுதி தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. விவசாய மற்றும் கிராமிய அபிவிருத்தியில் காப்புறுதி எவ்வாறான பங்களிப்பை வழங்கும் என்பது தொடர்பில் வெவ்வேறு துறைசார் பங்காளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்தப் பயிற்சிப்பட்டறை அமைந்திருந்தது.  

மோசமான காலநிலை விளைவுகள் உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலும் அதிகரித்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் விவசாய இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வழங்க ஆரம்பித்துள்ளன. 2000 -  2017 இடையிலான காலப்பகுதியில் 33 வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் 8,736 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (மூலம்: IWMI அறிக்கைகள்)  

இதன் அடிப்படையில், இந்தப் பயிற்சிப்பட்டறையின் போது, காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய உடனடி மற்றும் நீண்ட கால அடிப்படையிலான நிதிசார் தாக்கங்களை எதிர்கொள்வதற்கு விவசாயக் காப்புறுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளமை தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் Fairfirst இன்சூரன்ஸ் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி சஞ்ஜீவ் ஜா கருத்துத் தெரிவிக்கையில், “IWMI மற்றும் Epic Research & Innovations உடன் கைகோர்த்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது தாய் நிறுவனமான Fairfax ஊடாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நாம் கொண்டுள்ள நிபுணத்துவம் மூலமாக இலங்கையர்கள் மத்தியில் காணப்படும் காலநிலை இடர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போதைய அறிவுமட்ட மற்றும் பாதுகாப்பு இடைவெளியை நிவர்த்தி செய்து கொள்ளப் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் என நாம் கருதுகிறோம்” என்றார்.  

காலநிலை தரவு, ICT முன்கூட்டிய எச்சரிக்கைகள், காப்புறுதித் திட்டங்கள், கொள்கைகள், திட்டமிடல் மற்றும் நிறுவனசார் செயற்பாடுகள் தொடர்பில் உரையாற்றுவதற்கு இலங்கையின் காப்புறுதி துறையில் காணப்படும் நிபுணர்கள், தேசிய மட்டத்தில் காணப்படும் நிபுணர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். IWMI இல் நீர் இடர்கள்  மற்றும் அனர்த்தங்களுக்கான ஆய்வு குழுத் தலைவர் கிரிராஜ் அமர்நாத் கருத்துத் தெரிவிக்கையில், “காலநிலை இடர்களின் போது ஏற்படும் நிலைமைகளை முறையாகக் கையாள்வதற்கு திட்டமிடுவோருக்கு உதவக்கூடிய புத்தாக்கமான வெள்ளக் காப்புறுதித் திட்டமொன்றை, தெற்காசிய பிராந்தியத்தில் IWMI மற்றும் CGIAR ஆய்வு நிகழ்ச்சி CCAFS மற்றும் WLE (நீர், காணி மற்றும் சூழல் கட்டமைப்பு) ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. இது இலங்கைக்கும் காலநிலை இடர் தீர்வுகளை நிறுவுவதில் அதிகளவு எதிர்பார்க்கப்படும் நடைமுறை சாத்தியமான நிபுணத்துவத்தை வழங்கும்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .