2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

JAT அனுசரணையில்கட்டட திட்ட விவரவியலாளர்களின் மாநாடு

Gavitha   / 2017 ஏப்ரல் 24 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சினமன் கிரான்ட் ஹொட்டலில் அண்மையில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான கட்டட திட்ட விவரவியலாளர்களின் மாநாட்டுக்கான பிரதான அனுசரணையாளர்களுள் ஒன்றாக JAT Holdings திகழ்ந்தது. 

இம்மாநாடானது, திட்ட விவரங்கள் மற்றும் அவற்றின் அமுலாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த கலந்துரையாடலுக்கு கட்டடக்கலைஞர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு தளத்தை வழங்கியது. இலங்கையில் தரமான கட்டடங்களை உறுதி செய்வதற்கு சரியான திட்ட விவரங்களின் தேவை குறித்து திட்ட விவரவியலாளர்கள் உள்ளடங்களான சகல நிபுணர்களினதும் கருத்துக்களைக் கண்டறிவதே இக்கருத்தரங்கின் நோக்கமாக அமைந்து இருந்தது. 

கலாநிதி மைக்கல் ஈ. ஜோக்கீம், கட்டுமாணத்துறை அபிவிருத்தி அதிகாரசபை (CIDA) தேசபந்து கட்டட வடிவமைப்பாளர் / திட்டமிடுனர் கலாநிதி சுரத் விக்கிரமசிங்க - தலைவர்-கட்டடத்துறை சம்மேளனம், வித்யாஜோதி பேராசிரியர் டேமியன் நோர்பர்ட் லக்ஷ்மன் அல்விஸ் - ஸ்தாபக தலைவர்-டிசைன் கொன்சோர்டியம், முன்னைநாள் தலைவர் கட்டட வடிவமைப்பாளர் பேராசிரியர் சித்ர வெடிக்கார - கொழும்பு கட்டட தொழில்நுட்ப பாடசாலையின் முதல்வர், ரஞ்சித் குணதிலக - முகாமைத்துவப் பணிப்பாளர்- சங்கென் கொன்ஸ்ட்ரக்ஷன் (பிரைவெட்) லிமிட்டட், கட்டட வடிவமைப்பாளர் பேர்னார்ட் கோமஸ் நிறுவனத்தின் கட்டட வடிவமைப்பாளர்கள், கட்டட வடிவமைப்பாளர் சன்ன தஸ்வத்த - MICD அசோசியேட்ஸ், எஸ். எஸ். பி. ரத்னாயக்க - பணிப்பாளர் நாயகம்-UDA மஹிந்த ஜினசேன, தலைவர் (IDB) போன்ற முக்கியமானவர்களினால் கட்டட திட்ட விவரவியலாளர்களின் மாநாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

“இலங்கையின் கட்டடத்துறையை உலகத்தரத்துக்கு உயர்த்த மிகச்சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த மாநாட்டின் பிரதான அனுசரணையாளராக திகழ்வதையிட்டு JATஇலுள்ள நாம் கௌரப்படுத்தப்பட்டுள்ளோம். இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேராசிரியர் சித்ர வெடிக்கார மற்றும் பிரேம் அன்வேஷி ஆகியோருடன் உரையாடும்பொழுது அதனை ஏற்றுக்கொண்டு அதனை நிஜமாக்கியது குறித்து நான் தனிப்பட்ட ரீதியில் மகிழ்ச்சியடைகிறேன். சரியான திட்ட வரைபுகளினால் ஒரு திட்டத்தை வெற்றியாக்கவும் தோல்வியாக்கவும் முடியும்.

பலதரப்பட்ட கீழான மாற்றுவழிகள் உள்ள இலங்கை போன்ற சூழலில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சிறப்பானதும் சரியானதுமான திட்ட வரைபுகள் கட்டட வடிவமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு சிறப்பானதும் நேரத்துக்கு திட்டங்களை நிறைவு செய்ய உறுதியான கருவியாக இருக்கும்’ என JAT ஹோல்டிங் (பிரைவெட்) லிமிட்டட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏலியன் குணவர்தன தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .