2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

LG குளிர்சாதனப் பெட்டிகளில் மின்சாரத்தை சேமிக்கும் அசல் லீனியர் இன்வெர்டர் கம்பிரெஸர்

Editorial   / 2018 ஏப்ரல் 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் குளிர்சாதனப் பெட்டியில், ‘லீனியர் இன்வெர்டர் கம்பிரெஸர்’ மற்றும் ‘டோ கூலிங்’ தொழில்நுட்பம் இல்லை என்றால், அது நிஜமாக மின்சாரத்தைச் சேமிக்கும் குளிர்சாதனப் பெட்டி என்று சொல்ல முடியாது.

சாதாரண ‘இன்வெர்டர்’ குளிர்சாதனப் பெட்டிகளில், உணவை மட்டுமே பாதுகாக்க முடியும். வேறு எந்த மேலதிக அனுகூலமும் பெற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறான குளிர்சாதனப் பெட்டிகளால் மின்சாரம் அதிகம் செலவாகி, உங்கள் மாதாந்த மின்சாரப் பட்டியல் அதிகரித்துச் செல்கின்றது. 

வேறு குளிர்சாதனப் பெட்டிகளில் காணக்கூடிய ‘இன்வெர்டர்’ செயற்பாடுகளைப் போலல்லாமல், முற்றிலும் மாறுபட்டதொரு செயற்பாடே LG குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ளன. LG நிறுவனத்துக்கு உரித்தான ‘பேடன்ட்’ உரிமம் கொண்ட விசேட தொழில்நுட்பச் செயற்பாடே,  செயற்படுத்தப்பட்டுள்ளது.இது உணவைப் பாதுகாத்து, மேலும் பல்வேறு அனுகூலங்களை வழங்குகிறது.  

‘இன்வெர்டர் லீனியர் கம்பிரெஸர்’ இதிலுள்ள மிக முக்கியமான தொழில்நுட்ப அம்சமாகும். மேலும், இது சிலிண்டர் வடிவிலான பிஸ்டனைக் கொண்டுள்ளதோடு, நேரடியாக ஓர் இடத்தில் மாத்திரமே மோதி, உராய்வை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகக் குறைந்த சத்தம், குறைந்த அதிர்வு ஏற்படுவதால் நீண்ட காலத்துக்கு நீடித்துழைக்கின்றது. 

இதன் எளிய ‘கம்பிரெஸர்’ செயற்பாடு, நீங்கள் பொருட்களை அடுக்கி வைத்துள்ள அளவுகளுக்கு ஏற்ப, குளிர்ச்சியைச் சரிசெய்து, மின்சாரச் செலவை 42சதவீதத்தினால் குறைக்கின்றது.   

இதன் ‘LG டோ கூலிங் இன்வெர்டர்10’  குளிர்சாதனப் பெட்டிக் கதவுகளிலும் குளிர்ச்சியூட்டும் ‘டோ கூலிங்’ தொழில்நுட்பமானது, LG குளிர்சாதனப் பெட்டிகளுக்கு மாத்திரம் தனித்துவமான ஒரு விசேட தொழில்நுட்பமாகும். 

இதன் கதவின் பின்புறத்தில் மற்றும் ஒரு புறத்தில் விசேட துளைகளைக் கொண்டுள்ளதோடு, சகல இராக்கைகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டி முழுவதிலும், எல்லா இடங்களிலும் ஒரே சீரான, சமமான குளிர்ச்சியைப் பெற்றுத்தருகிறது.  

இதன் அடிப்படையில், LG  ‘இன்வெர்டர் லீனியர் கம்பிரெஸர்’ மற்றும் ‘டோகூலிங்’ தொழில்நுட்பம், சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல், மின்சாரத்தைச் சேமித்து, சிறந்த முறையில் இயங்குகிறது.  

உணவுப் பாதுகாப்பின்போது, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான குளிர்காற்றை வெளிப்படுத்துவதே இதன் சிறப்பம்சமாகும். ‘LG இன்வெர்டர் 10’ குளிர்சாதனப் பெட்டிகளின் உட்புறத்து வாயுகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக, ஐந்து படிமுறைகளைக் கொண்ட, வடிக்கட்டி மூலம் 99.99% வாயுவில் உள்ள நச்சுகளையும் அசுத்தங்களையும்அழித்து, குளிர்சாதனப் பெட்டியின் புத்துணர்வைப் பேணுகிறது. இதில் அடுக்கியுள்ள மரக்கறி, பழங்கள், மீன், இறைச்சி வகைகள் மற்றும் சமைத்த உணவுகளில் இருந்து வெளியாகும் துர்நாற்றத்தை நீக்குவதோடு, ‘ஈ-கோலய்’, ‘செல்மொனெல்லா’ போன்ற பாக்டீரியா உருவாக்கத்தின் மூலம், உணவு கெட்டுப் போவதைத் தடுக்கின்றது. இதனால் குளிர்சாதனப் பெட்டிக்குள்  வைக்கப்பட்டுள்ள உணவுகளைப் பயன்படுத்துவதால், உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படுகிறது.  

மகிழ்ச்சி நிறைந்த, ஆரோக்கியமான இல்லத்தைக் கட்டியெழுப்பும் போது, உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட LG உற்பத்திகள் மிக முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. உலகின், எதிர்காலத்து ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில், சூழல் நட்புறவுமிக்க மற்றும் மின்சாரத்தைச் சேமிக்கும் உற்பத்தியாக, LG வீட்டு மின் பாவனைப் பொருட்களைச் சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. வேறு உற்பத்திகளைப் போலல்லாமல், LG உற்பத்திகள், நாளுக்கு நாள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்கும் வகையில், தமது உற்பத்திகளை மேம்படுத்துவதில் அதீத அக்கறை செலுத்தி வருகிறது.  

இதனால், சாதாரண ‘இன்வெர்டர்’ தொழில்நுட்பத்தில் வரும் குளிர்சாதனப் பெட்டிகளை வாங்குவதற்காக நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீண்விரயம் செய்யாதீர்கள். இன்றே உங்கள் அருகாமையிலுள்ள அபான்ஸ் காட்சியறைகளுக்கு வந்து, உண்மையாக மின்சாரத்தை சேமிக்கும் LG குளிர்சாதனப் பெட்டிகளை வாங்குங்கள்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .