2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Majestic City உடன் SLT-MOBITEL உடன்படிக்கையில் கைச்சாத்து

S.Sekar   / 2021 ஏப்ரல் 09 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, Majestic City விற்பனைத் தொகுதியின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் விற்பனைத் தொகுதியின் உரிமை நிறுவனமான CT லான்ட் டிவலப்மன்ட் பிஎல்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது.

கொழும்பு கோட்டையிலுள்ள SLT இன் தலைமையகத்தில் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்த உடன்படிக்கையில் SLT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா மற்றும் CT லான்ட் டிவலப்மன்ட் பிஎல்சியின் பணிப்பாளர் மிக்னோன் பெரேரா ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்வில் இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் மயமாக்கம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இலங்கையிலும் அதனை அவதானிக்கக்கூடியதாவுள்ளது. இந்நிலையில் Majestic City இன் உட்கட்டமைப்பு தொழில்நுட்ப வசதிகளை நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு மேம்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டிருந்தது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக கருதப்படும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி, இந்த விற்பனைத் தொகுதிக்கு அதிவேகமான புரோட்பான்ட் இணைப்பு வசதியை fibre தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்படுத்திக் கொடுக்கவும், தொலைக்காட்சி களிப்பூட்டும் சேவையில் புரட்சியை ஏற்படுத்தியிருந்த PEO TV வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் CT லான்ட் டிவலப்மன்ட் பிஎல்சியுடன் உடன்பாட்டுக்கு வந்திருந்தது.

நகரின் மத்தியில் ஸ்மார்ட் கட்டிடத்தை செயற்படுத்துவதற்கு அவசியமான உதவிகளையும் நிபுணத்துவத்தையும் வழங்குவது ஸ்ரீ லங்கா ரெலிகொம்மின் இலக்காக அமைந்திருந்தது. இதனூடாக மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், டிஜிட்டல் முறையில் உள்ளார்ந்த வாழ்க்கைப் பாணியை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.

புதிய கைகோர்ப்பு தொடர்பில் CT லான்ட் டிவலப்மன்ட் பிஎல்சியின் பணிப்பாளர் மிக்னோன் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் மாற்றம் மற்றும் புத்தாக்கத்தை அனுபவிப்பதன் முக்கியத்துவத்துக்கமைய, டிஜிட்டல் மயமாக்கத்தை எய்துவதில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியை மிகவும் பொருத்தமான பங்காளராக தெரிவு செய்துள்ளோம். அதனூடாக இந்த டிஜிட்டல் யுகத்துக்கு பொருத்தமான வகையில் எம்மால் திகழக்கூடியதாக இருக்கும். Majestic City ஐ புதிய வசதிகளுடன் பார்வையிட எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

SLT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் இடையீட்டினூடாக தேசத்தை மேம்படுத்த எதிர்பார்க்கும் நிறுவனம் எனும் வகையில், உள்நாட்டில் வளர்ச்சியடைந்துள்ள வியாபாரங்களுக்கு சிறந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் தொலைபேசி தீர்வுகளை வழங்குவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றோம். Majestic City இன் வசதிகளை மேம்படுத்தும் வாய்ப்பு எமக்குக் கிடைத்ததையிட்டு நாம் மிகவும் பெருமிதம் கொள்வதுடன், பொது மக்களுக்கு அனுபவித்து மகிழக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

ஐந்து மாடிகளைக் கொண்டதாக MC திகழ்கின்றது. சகல வயதையும் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இங்கு விஜயம் செய்கின்றனர். சொப்பிங் மற்றும் வணிக செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய மையமாகவும் இது திகழ்வதுடன், ஓய்வான பொழுதை அனுபவிக்கக்கூடிய பகுதியாகவும் அமைந்துள்ளது. சொப்பிங் மற்றும் களிப்பூட்டும் வசதிகளுக்கு மேலாக, வாடிக்கையாளர்கள் பல்வேறு உணவு வகைகளையும் இங்குள்ள Food Arcade பகுதியில் சுவைத்து மகிழ்ந்து வருகின்றனர். கீழ் மாடிப் (basement) பகுதியில் அமைந்துள்ள இந்த உணவகப் பகுதியில் பல்வேறு உணவுத் தெரிவுகளைக் கொண்ட உணவகங்கள் காணப்படுகின்றன.

MC இல் 200 க்கும் அதிகமான விற்பனை நிலையங்கள், அலுவலகங்கள், 3 வங்கிகள், சுப்பர் மார்க்கெட், KFC துரித சேவை உணவகம், Game Zone, Food Arcade மற்றும் Majestic Cineplex திரையரங்கு போன்றவற்றுடன் மூன்று மாடிகளில் வாகனத் தரிப்பிட வசதிகளும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .