2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

McPeak Lanka நிறுவனத்தினூடாக ஒருங்கிணைக்கப்பட்ட முகாமைத்துவத் தீர்வுகள்

Editorial   / 2018 ஜூன் 20 , மு.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

McOcean Property Developers (Pvt) Ltd (McLarens Group இன் ஓர் உறுப்பு நிறுவனம்) மற்றும் சிங்கப்பூரின் Peak Engineering & Consultancy (Pte) Ltd ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு வியாபார முயற்சியாக, உள்நாட்டுச் சந்தையில் ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகள் முகாமைத்துவத் தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமான McPeak Lanka (Private) Limited இனை ஆரம்பித்துள்ளன.  

 நாட்டிலுள்ள விசாலமான அரச மற்றும் தனியார் துறை ஸ்தாபனங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகள் முகாமைத்துவத் தீர்வுகளை வழங்குவதற்கு McPeak Lanka எண்ணியுள்ளது. தமது ஸ்தாபனங்களில் உயர்தரச் சேவை ஆற்றல்களை மேம்படுத்தி, நிலைபெறச் செய்வதை நாடுகின்றவர்களுக்கு முழுமையான வகைப்பட்ட அதிநவீன தீர்வுகளை நிறுவனம் வழங்கவுள்ளது. 

வர்த்தக, கைத்தொழில், சில்லறை வர்த்தக அல்லது கலப்பு அபிவிருத்தி ஏற்பாடுகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பிரத்தியேகமாக ஈடுசெய்யும் வகையில் பணியாளர்கள், நடைமுறைகள் மற்றும் தொகுதிகளை இடையறாது ஒருங்கிணைப்பதனூடாக ஒரு உண்மையான ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் கட்டமைப்பை McPeak Lanka வழங்கவுள்ளது.

பாரிய அளவிலான கட்டடங்களின் தொழிற்பாடு மற்றும் பேணற்சேவை, பிரத்தியேகமான எந்திரவியல் மற்றும் மின்னியல் பொறியியல் நிபுணத்துவம், முழுமையான உள்ளக பேணற்சேவை மற்றும் துப்புரவு சேவைகள், பொது வசதிகளின் பேணற்சேவை, அதிநவீன பாதுகாப்புச் சேவைகள் மற்றும் தொகுதிகள், பதில் மருத்துவ மற்றும் வரவேற்பு ஆதரவு சேவை மற்றும் ஏனைய பல்வேறுபட்ட பிரத்தியேக சேவைகள் போன்றவை நிறுவனத்தின் சேவைகளில் உள்ளடங்கியுள்ளதுடன், பாவனையாளருக்கு ஒருங்கிணைந்த ஆதன முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் சார்ந்த முழுமையான தீர்வுகளை வழங்குகின்றது.  

 ஆதனம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத் துறையில் இரு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட உள்நாட்டு அனுபவத்தைக் கொண்டுள்ள McLarens Group இன் அனுகூலத்தைப் பயன்படுத்தவுள்ள McPeak Lanka குடியிருப்பு, வர்த்தக, சில்லறை வர்த்தக மற்றும் கைத்தொழில் ஆதனங்களைத் திறம்பட நிர்வகிப்பதில் சிங்கப்பூரின் Peak Engineering and Consultancy கொண்டுள்ள புத்தாக்கம், தொழில்சார் சிறப்பு மற்றும் மேன்மையான சேவை ஆகியவற்றை ஒன்றிணைக்கவுள்ளது. தொடர்ச்சியான மற்றும் திறன்மிக்க சேவை விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் நன்கு அனுபவம் பெற்றுள்ள முகாமைத்துவப் பணியாளர்களின் பக்கபலத்துடன், உயர் மட்டத்தில் பயிற்றுவிக்கப்பட்ட பொறியியல், பாதுகாப்பு மற்றும் துப்புரவாக்கல் ஆளணியை இப்புதிய நிறுவனம் வழங்கவுள்ளது.   

 கட்டட சூழலில் அனைத்து மின்னியல் மற்றும் எந்திரவியல் தொகுதிகளைப் பாதுகாப்பாக இயக்கும், கண்காணிக்கும், பேணும், பேணற்சேவையளிக்கும் மற்றும் சாதனங்களைச் சேர்த்து இணைக்கும் ஆற்றலை McPeak கொண்டுள்ளது. cloud அடிப்படையிலான கணினி மென்பொருள் மற்றும் மொபைல் apps அடங்கலாக விசேட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் முகாமைத்துவ வினைதிறனை மேம்படுத்துவதற்காகத் தேவையான வகையில் ஒருங்கிணைக்கப்படவுள்ளதுடன், தொழிற்பாட்டு மற்றும் ஆளணிச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும் உதவுகின்றன.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .