2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

MillenniumIT ESP இனால் BankVision அறிமுகம்

S.Sekar   / 2021 மே 05 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

MillenniumIT ESP, BankVision எனும் புதிய வாடிக்கையாளர்களை அவர்களின் இருப்பிடத்திலிருந்து இணைப்பை ஏற்படுத்தி அடையாளத்தை உறுதி செய்து கொள்வது, டிஜிட்டல் முறையில் இணைத்துக் கொள்வது மற்றும் இலத்திரனியல் முறையில் வாடிக்கையாளரை அறிந்து கொள்வது (e-KYC) ஆகிய வசதிகளை வங்கிகளுக்கு இணைய மற்றும் மொபைலில் செயற்படுத்தப்பட்ட டிஜிட்டல் கட்டமைப்பை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இதில் காணப்படும் உள்வைக்கப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களில், Artificial Intelligence (AI) அடிப்படையிலான வீடியோ பகுப்பாய்வுகள், புகைப்பட இனங்காணல்கள் மற்றும் தன்னியக்க தொழில்நுட்பங்கள் போன்றன அடங்கியுள்ளதுடன், செயன்முறைகளின் வினைத்திறனை மேம்படுத்தி, தேவையான போது நபர்களால் மேற்பதிவுகளை செய்து கொள்ளக்கூடிய வசதியையும் வழங்குகின்றது.

BankVision இனால் வங்கி வாடிக்கையாளர்களுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டை பேணுவதற்கான செயற்பாடுகள் வழங்கப்படுவதுடன், Customer Due Diligence (CDD)போன்ற ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகளும் வழங்கப்படுகின்றன. மேம்படுத்தப்பட்ட உள்ளம்சமாக, e-KYC செயன்முறை, AI அடிப்படையிலான OCR இனால் தரப்படுத்தல் என்ஜின்களினூடாக இடர்களை உறுதி செய்யக்கூடிய வகையில் சீரமைக்கப்பட்டுள்ளதுடன், CDD என்பது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கி, மெருகேற்றப்பட்ட தரவுகளை பேணக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

MillenniumIT ESP இன் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷெவான் குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள வரையறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக வாடிக்கையாளர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதில் காணப்படும் சவால்களை நிவர்த்திக்கும் வகையில் BankVision வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற காலப்பகுதியில், நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களின் வியாபார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதுடன், தொடர்புடைய இடர்களைக் குறைத்து, வாடிக்கையாளர் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக அவற்றை தக்க வைத்துக் கொள்வது அவசியமானதாகும். AI மற்றும் Analytics உடன் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது என்பதன் மூலம் தன்னியக்கமயமாக்கலை ஏற்படுத்தி, வங்கிகளினதும் வாடிக்கையாளர்களினதும் செலவுகளை பெருமளவு குறைத்துக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

BankVision அறிமுகத்தினூடாக, நாடு முழுவதையும் சேர்ந்த சமூகத்தாருக்கும் வியாபாரங்களுக்கும் தமது இருப்பிடங்களில் பாதுகாப்பாக இருந்தவாறு, அநாவசியமான பயணங்களை தவிர்த்து வங்கியியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்கும். புதிய BankVision app ஊடாக, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தைச் சேர்ந்த பகுதியுடன் தொடர்பை ஏற்படுத்தும் வசதி வழங்கப்படுவதுடன், சுய-சேவை பணிப்பாய்ச்சல் என்ஜினை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய அம்சத்தையும் கொண்டுள்ளது. இதனூடாக, நிறுவனங்களுக்கு மாறிவரும் வாடிக்கையாளர் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்பதுடன், தமது ஏற்கனவே காணப்படும் டிஜிட்டல் நாளிகைகளுடன் தீர்வை இலகுவாக ஒன்றிணைக்கக்கூடிய வகையிலும் அமைந்திருக்கும். ஏனைய தீர்வு உள்ளம்சங்களில் video conferencing மற்றும் customer profile rating ஆகியனவும் அடங்கியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .