2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

MillenniumIT ESPக்கு விருதுகள்

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

MillenniumIT ESP க்கு, அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை மென்பொருள், சேவைகள் நிறுவனங்களின் சம்மேளனம் (SLASSCOM) புத்தாக்க விருதுகள் 2019 நிகழ்வில், தொழில்நுட்ப தீர்வுகள் சமர்பிப்பில் மூன்று விருதுகளை வென்றிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. 

‘புத்தாக்க கட்டமைப்புசூழலை ஊக்குவித்தல்’ எனும் தொனிப்பொருளில் உள்நாட்டு புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் வியாபார சிறப்புகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் தகவல் தொழில்நுட்பம், வியாபார செயன்முறை முகாமைத்துவ (BPM) துறையிலிருந்து சுமார் 300 க்கும் அதிகமான நிபுணர்களை ஒன்றிணைத்திருந்த முன்னணி தொழில்நுட்ப புத்தாக்க விருதுகள் வழங்கும் நிகழ்வாக அமைந்திருந்தது.  

ஏழு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றில், சிறந்த தயாரிப்பு புத்தாக்கம், சிறந்த புரட்சியாளர் விருது, சிறந்த வாடிக்கையாளர் விநியோக புத்தாக்கம், உள்ளக செயன்முறையில் சிறந்த புத்தாக்கம், சிறந்த தொழில்நுட்பம் அல்லது கட்டமைப்பு புத்தாக்கம், சிறந்த ஆரம்ப நிலை தயாரிப்புஃசேவை, வியாபார செயன்முறை முகாமைத்துவத்தில் சிறந்த புத்தாக்கம் ஆகியன அடங்கியிருந்தன. உள்ளக செயன்முறையில் சிறந்த புத்தாக்கம் பிரிவில் வெற்றியாளர், இரண்டாம், மூன்றாம் இடங்களை MillenniumIT ESP பெற்றுக் கொண்டது. 

MillenniumIT ESP இனால் வடிவமைக்கப்பட்டிருந்த AutoPilot க்கு முதலிடத்துக்கான விருது வழங்கப்பட்டிருந்தது. AutoPilot என்பது AI செயற்படுத்தப்பட்ட intelligent automation கட்டமைப்பாக அமைந்துள்ளது. நிறுவனத்தின் ஏற்கனவே காணப்படும் உதவிச் சேவை செயன்முறையுடன் இணைத்து, மதிநுட்பமான தீர்மானங்களை மேற்கொண்டு, மனித முகவர்களால் தினசரி மேற்கொள்ளும் செயற்பாடுகளை தன்னியக்கமான முறையில் மேற்கொள்ளக்கூடிய செயற்பாடாகும். இதனூடாக மனித தலையீடு குறைக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .