2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Mobitel 5G பற்றிய செயல் விளக்கமளிப்பு

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபிடெல், தமது புதிய 5G இணைப்பைப் பற்றி செயற்பாட்டு விளக்கத்தை சமீபத்தில் One Galle Face Mall இல் வழங்கியிருந்தது. இப்பிராந்தியத்தின் ப்ரோட்பாண்ட் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லான இந்நிகழ்வில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக, ரொஹான் பர்னான்டோ, தலைவர்- SLT, மொபிடெல், அத்தோடு ஸ்ரீ லங்கா டெலிகொம், மொபிடெல் ஆகியவற்றின் பணிப்பாளர் சபையினரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். மொபிடெலின் வர்த்தக நாம தூதரான அஞ்சலோ மதிவ்ஸ் இத்தொழில்நுட்ப வௌிப்பாட்டைக் காண ஒரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  

இலங்கையை ஒரு தகவல் தொடர்பாடல், அறிவு சார் சமுதாயத்தை கொண்ட நாடாக முன்னெடுத்துச் செல்வதை தொலைநோக்காகக் கொண்ட மொபிடெல், தற்போது தொடர்ந்தும் மிகவும் மேம்பட்ட 5G தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதன் மூலம் ஒவ்வொரு இலங்கையரும் இங்கு வந்து 5G யின் உண்மையான சக்தியை அனுபவித்து, மொபிடெல் 5G உடன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வழிவகுக்கிறது.  

மொபிடெல், 2019 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு, தொழில்நுட்ப ஆவர்வலர்கள், கொள்கை வகுப்பவர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் பரந்த பிரிவினருக்கு ஏற்கெனவே நாடு முழுவதும் நடத்திச் சென்றதன் இரண்டாவது கட்டமாகவே, இந்த 5G சோதனை, செயல்விளக்கமளிப்பு இடம்பெறுகிறது. பிராந்தியத்தில் 5G தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு சர்வதேச தொழில் மன்றங்களால் மொபிடெல் சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்றுள்ளது.  

தேசிய மொபைல் சேவை வழங்குனர் என்ற வகையில் மொபிடெல், 2019ஆம் ஆண்டில் USD 100 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ப்ரோட்பாண்ட்டை விஸ்தரிப்பதற்காக முதலீடு செய்துள்ளது. அதே போல் தொடர்ந்தும் 2020ஆம் ஆண்டில் முழு நாட்டுக்கும் வலையமைப்பினை விஸ்தரிப்பதற்காக குறிப்பிடத்தக்க முதலீட்டினை மேற்கொண்டுள்ளது.  

மொபிடெலின் 5G வலையமைப்பு அதன் தாய் நிறுவனமான SLT இன் அதிவேக ஃபைபர் இணைப்பின் (Fiber connectivity) ஆதரவுடன் செயற்படுகிறது. இது சரியான நேரத்திலான 5G இன் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு மேம்பட்ட தயார்நிலையை வழங்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .