2024 மார்ச் 28, வியாழக்கிழமை

Pick Me உடன் இணைய அரிய வாய்ப்பு

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் போக்குவரத்து துறையின் அபிவிருத்திக்குப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதன்மை நிறுவனமான Pick Me, தமது தொழில் படையையும் தொழில் முயற்சியையும் தகவல் தொழில்நுட்பத் துறையின் துணையோடு வலுவூட்டும் வேலைத்திட்டத்தை தற்பொழுது ஆரம்பித்துள்ளது. 

அதன் பிரகாரம் தகவல் தொழில்நுட்பத் துறையில் திறமையுள்ள இளைஞர் யுவதிகளுக்கு Pick Me நிறுவனத்துடன் இணைந்து தமது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வதற்கான அரியதொரு வாய்ப்பு உருவாகியுள்ளது.  

அண்மையில் Pick Me நிறுவனத்துடன் இணைந்த அருண பிரபாஸ்வர, தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது, “Pick Me நிறுவனத்தின் பொறியியல் பிரிவில் நான் சேரக் காரணம், புதிதாக எதையாவது செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் ஆகும். உயர் தரத்தை தொடர்ந்து Java, C கற்ற நான், 2014 ஆம் ஆண்டில் மொரட்டுவை பல்கலைகழகத்தில் சேர்ந்தேன். Pick Me நிறுவனத்துடன் இணைய வேண்டுமென்ற ஆசை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. அவர்கள் புதிய தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளிப்பதே அதற்குக் காரணமாகும். ஆகவே, பல்கலைக்கழக படிப்பு முடிவதற்கு முன்னரே என்னுடைய CV ஐ Pick Me நிறுவனத்துக்கு ஈ மெயில் மூலம் அனுப்பினேன். நேர்முகப் பரீட்சையின் போது, புதிய ‘ப்ரோகிராமிங் லங்வேஜ்’ ஒன்றை கொடுத்து, ‘ப்ரொஜெக்ட்’ ஒன்றை செய்யச் சொன்னார்கள். அதன் மூலமே என்னைத் தெரிவு செய்தார்கள்”.  

“நவீன தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற நிறுவனமொன்றில் பணியாற்றி, புதிய அறிவைப் பெறுவதே அடிப்படை நோக்கமாக இருந்தது. அதனால் பட்டப்படிப்பை முடித்தவுடனேயே Pick Me நிறுவனத்துடன் இணைந்துக் கொண்டேன். பணியாற்றுவதற்கு உகந்த சுமூகமான சூழலொன்று இங்கு காணப்படுகிறது. Pick Me நிறுவனத்தில் இணைவதற்கு நான் எடுத்த முடிவு மிகச் சரியான முடிவென்றே சொல்ல வேண்டும்” என நிபுண பத்திரண தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X