2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

Royal Cashewsக்கு NCE விருது

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

  இலங்கையின் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனமான ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் நிறுவனத்தின் தயாரிப்பான ‘Royal Cashews’ தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக NCE ஏற்றுமதி விருதை பெற்றுக் கொண்டது.    

‘பசுமையான மற்றும் பதப்படுத்தப்பட்ட விவசாய ஏற்றுமதி பயிர்கள்’ பிரிவின் தேசிய விருது ‘Royal Cashews’ க்கு வழங்கப்பட்டிருந்தது. இலங்கை தேசிய ஏற்றுமதி சபையினால் 26ஆவது தடவையான வருடாந்த தேசிய ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜொஆன் டோர்னேவாட் கலந்து கொண்டார்.

கடந்த ஆண்டில் விவசாய மொத்த பிரிவில் NCE விருதை ‘Royal Cashews’ பெற்றுக் கொண்டது.
‘Royal Cashews’ முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி. ருவன் வதுகல கருத்துத் தெரிவிக்கையில், “நாம் ‘Royal Cashews’ தயாரிப்புகளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். உலகளாவிய ரீதியில் எமது வர்த்தக நாமம் தெரிவுக்குரிய நாமமாக மாற்றமடைந்துள்ளது. கஜு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதனூடாக குறிப்பிடத்தக்களவு அந்நியச் செலாவணியை நாம் பெற்றுக் கொள்வதுடன், இந்த NCE தேசிய விருது அதற்கு சிறந்த கௌரவிப்பாக அமைந்துள்ளது” என்றார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “நாம் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘Royal cashews’ உற்பத்தி செய்கிறோம். எமது R&D பிரிவினால் புதிய நாவூறும் சுவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, பிற நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களும், உள்நாட்டவர்களும் எமது கஜு தயாரிப்புகளின் மீது அதிகளவு ஈடுபாட்டை கொண்டுள்ளனர். இலங்கையில், நட்சத்திர ஹோட்டல்கள், முன்னணி உணவகங்கள் மற்றும் சொக்லேட், பிஸ்கட் உற்பத்தியாளர்கள் ‘Royal Cashews’ தயாரிப்புகளை கொள்வனவு செய்கின்றனர்” என்றார்.

கலாநிதி. வதுகல மேலும் குறிப்பிடுகையில், “எமது நிறுவனம் 1999ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. குறுகிய காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை சென்றடைந்துள்ளதுடன், எமது தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவும், எமது தயாரிப்புகளின் சிறப்பும் இதை எய்த முடிந்தது. ‘Royal Cashews’ வர்த்தக நாமம் புகழ்பெற்ற ஏற்றுமதி தயாரிப்பாக அமைந்துள்ளது. கஜு தயாரிப்புகளை விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கும் சுவையான வெளிநாட்டு உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .