2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

SLT-MOBITEL இடமிருந்து பஸ் சேவைக்கு Wi-Fi இணைப்புகள்

Johnsan Bastiampillai   / 2021 ஜனவரி 22 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘Park and Ride’ நகர பஸ் சேவைக்கு Wi-Fi இணைப்புத் தீர்வுகளையும் வர்த்தக நாமத் தீர்வுகளையும் வழங்க இலங்கை போக்குவரத்து சபையுடன் SLT-MOBITEL கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. 

கடந்தவாரம் இடம்பெற்ற சொகுசு பஸ் சேவை அறிமுக நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, SLTB தவிசாளர் கிங்ஸ்லி ரணவக, ஸ்ரீ லங்கா டெலிகொம் குழும தவிசாளர் ரொஹான் பெர்ணான்டோ ஆகியோருடன் SLT-MOBITEL உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அண்மையில் SLT-MOBITEL வர்த்தக நாம ஒன்றிணைப்பினூடாக, ஒன்றிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் தேசிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநரின் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நகர பஸ் சேவை பங்காண்மையுடன், SLT-MOBITEL இனால் அடுத்த தலைமுறை இணைப்புத் தீர்வுகளை தேசம் முழுவதிலும் வழங்க முன்வந்துள்ளது.

Park and Ride பஸ் சேவையுடனான கைகோர்ப்புத் தொடர்பில் ஸ்ரீ லங்கா டெலிகொம் குழும தவிசாளர் ரொஹான் பெர்ணான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “SLT-MOBITEL ஐப் பொறுத்தமட்டில் இன்று மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையுடன் கைகோர்த்து, நாட்டில் ஒப்பற்ற இணைப்புத் தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளோம்.வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கும் வர்த்தகம் எனும் வகையில், அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எப்போதும் புத்தாக்கமான வழிமுறைகளை நாம் தேடிய வண்ணமுள்ளோம். Park and Ride நகர பஸ் சேவையினூடாக, இலங்கையர்களுக்கு SLT-MOBITEL இன் உலகத் தரம் வாய்ந்த Wi-Fi  இணைப்பு சேவைகளை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். இலங்கையில் தகவல் நிறைந்ததும் அறிவுபூர்வமானதுமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்குத் தேசிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநர் எனும் வகையில், எமது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளோம்” என்றார்.

கொழும்பு நகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் நகர பஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பானதும் சௌகரியமானதுமான போக்குவரத்து வசதிகளை, கொழும்பில் ஏற்படுத்திக் கொடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

முதற்கட்ட சேவைகள், மாக்கும்புர போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து 25 பஸ்களுடன் இயங்குகின்றது. நாடு முழுவதிலும் இந்தச் சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும். காலை 6.00 மணி முதல் மு.ப 9.00 மணி வரை தினசரி இந்தப் பஸ் சேவை இடம்பெறும். மு.ப. 9.00 மணியின் பின்னர், ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் இரவு 8.00 மணி வரை இடம்பெறும்.

வாகனத் தரிப்பிடத்துக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில், தமது வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை தரித்து நிறுத்திவிட்டு, ‘Park & Ride’ நகர பஸ் சேவையைப் பயன்படுத்தி கொழும்புக்கு வருகை தர முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .