2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

SLT இலாபம் அதிகரிப்பு

Editorial   / 2019 மார்ச் 07 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

31 டிசெம்பர் 2018இல் முடிவுற்ற ஆண்டிறுதிக்கான தனது நிதிநிலைச் செயற்றிறன் அறிக்கையை ஸ்ரீ லங்கா டெலிகொம் வெளியிட்டுள்ளது.

SLT உடமைக்கம்பனி, 9 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட அலைபேசி துணை நிறுவனம் மொபிடெல் (தனியார்) லிமிடெட் உள்ளடங்கலாக, எட்டு துணை நிறுவனங்கள் இந்தக் குழுமத்தில் உள்ளடங்கும்.   

மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டக் காலத்தில், ஈர்க்கத்தக்க 7.53% வளர்ச்சியுடன் ரூ. 81.44 பில்லியனை குழுமம் வருமானமாகப் பதிவுசெய்துள்ளது. இந்த வளர்ச்சி அனைத்து துறைகளிலும் இருந்தபோதும், மொபைல் செயல்பாடுகளுடன் FTTH, IP TV, தரவுகள் தொடர்பாக சேவைகள், தொழில் முயற்சி, கேரியர் தொடர்பான வர்த்தகங்கள் மூலம் அதிகம் உந்துதலை பெற்றிருந்தது.

உலகளாவிய போக்கைப் புரிந்துகொண்ட குழுமம், தற்போது தரவு தொடர்பான உற்பத்திகளில் அதிகம் அவதானம் செலுத்துகிறது.   

மீளாய்வுக்கு உட்பட்ட ஆண்டு காலத்தில் 12.66% ஆண்டு வளர்ச்சியுடன் 36.64 பில்லியன் ரூபாய் மொத்த இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக குழும அறிக்கையில் குறிப்பிடப்ப ட்டுள்ளது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.58% ஈர்க்கத்தக்க வளர்ச்சியுடன் 2018ஆம் ஆண்டுக்கான குழுமத்தின் வரிக்கு பின்னரான நிகர இலாபம் 4.95 பில்லியன் ரூபாயாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி இழப்பினால், 1.81 பில்லியன் ரூபாய் எதிர்மறை தாக்கம் இருந்த போதும், வருவாயில் ஏற்புடைய வளர்ச்சியுடன் இணைந்த செயற்பாட்டு செலவுகளின் சிறந்த முகாமைத்துவம் காரணமாக குழுமத்தினால் இலாபத்தின் வலுவான வளர்ச்சியை பதிவு செய்ய முடிந்துள்ளது.

முந்தைய ஆண்டின் 28.00% உடன் ஒப்பிடுகையில் குழுமத்தின் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தீர்ப்புக்கு முந்தைய வருவாய் (EBITDA) 31.38% ஆக அறிக்கையிடப்பட்டிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .