2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

Samsung இடமிருந்து Galaxy M Series

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோரின் வாழ்வை மேம்படுத்தும் தயாரிப்புகள், புதுமைகளை உருவாக்குவதற்கான Samsung இன் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்கு மிகவும் பிரபலமான Galaxy M series ஒரு சிறந்த சான்றாகும். இந்த நோக்கத்தைக் கருத்திற் கொண்டு சக்தி வாய்ந்த பட்டரி, கமெரா, டிஸ்ப்ளேயின் கலவையைக் கொண்ட Galaxy M31, M21, M1 ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.  

Galaxy M31 sports ஆனது 64MP quad-camera அமைப்பைக்  கொண்டுள்ளது. 64MP கமெரா கண்கவர் படங்களை, மிகவும் நுணுக்கமாகவும் தெளிவாகவும் எடுத்திட உதவுகிறது. இதன் சக்தி வாய்ந்த 8MP Ultra-Wide lens ஆனது 123 - டிகிரியில் தளக் காட்சியை வழங்குகிறது. அதனால் பயனர்களுக்கு உலகைக் காணும் விதத்திலேயே அதன் அசல் தோற்றத்தில் படங்களை எடுத்துக் கொள்ள உதவுகிறது.   

Galaxy M31 ஆனது 4K recording, hyperlapse, slow-mo மற்றும் super-steady modes உடன் அற்புதமான வீடியோ திறனைக் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக குறைந்தளவிலான ஒளி இருந்திடும் பொழுது தெளிவான படங்களை எடுத்திட சிறப்பான night mode உம் உள்ளது. 32MP முன் பக்க கமரா 4k video recording, slow-mo selfies போன்றவற்றை எடுத்திட உதவுகிறது. புயடயஒல ஆ31 இன் இத்தொழிற்துறையில் தலைசிறந்த 6000mAh பட்டரி மிகவும் இலகுவாக முழு நாளும், இரவு வேளையும் நீடித்து உழைக்கக்கூடியது. அதிதிறமை வாய்ந்த பட்டரியைக் கொண்டிருந்தாலும் Galaxy M31 ஆனது 8.9mm அடர்த்தியில், 191 கிராம் நிறையைக் கொண்டுள்ளது. அதனால் மிகவும் இலகுரகத்தைக் கொண்டதுடன் கையில் பிடிப்பதற்கு வசதியாகவும் இருந்திடும்.   

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy M21 உம் இத்தொழிற்றுறையில் தலைசிறந்த 6000mAh பட்டரியைக் கொண்டுள்ளது. அத்துடன் சக்தி வாய்ந்த 48MP பின் பக்க கமெரா, 6.4” sAMOLED display அதிகம் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் எவருக்கும் உகந்தது ஆகும்.   

அத்தோடு இது அனைத்து ஒளி நிலைமைகளின் கீழும் சிறந்த காட்சிகளைப் படம் பிடித்திட சக்தி வாய்ந்த triple camera system இனைக் கொண்டுள்ளது. Galaxy M21 இன் 48MP பிரதான கமெரா F2.0 aperture உடன் வருகிறது. இதன் 8MP Ultra Wide கமெரா 123 - டிகிரியில் தளக் காட்சியை வழங்குகிறது. அதனால் சாதாரண மனிதரின் பார்வைக் காட்சியை இது வழங்குகிறது. இதன் மூன்றாவது 5MP depth camera ஆனது பயனர்களுக்கு பிரதான அம்சத்தையும் அதற்குப் பின்னணியிலுள்ள காட்சியையும் வேறுபடுத்தி அழகிய Live Focus படங்களை எடுக்க உதவுகிறது. Galaxy M21 இன் 20MP front camera உங்களுக்கு விரும்பிய சிறந்த selfieகளை எடுத்திடக் கூடிய வகையிலான built-in filters மற்றும் வேறுபட்ட கமெரா mode களைக் கொண்டுள்ளது.  

M31, M21 ஆகிய இரண்டும் மிகவும் சக்தி வாய்ந்த சாதனங்கள் ஆகும். இவை இரவு பகல் முழுவதும் நீடித்து உழைக்கும் மெகா பட்டரியைக் கொண்டிருப்பதுடன் இடைவிடாத செயலுடன் வேகத்தையும் தக்கவைத்துக் கொண்டு துல்லியமான படங்களை எடுத்திடக் கூடியவை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .