2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Singer Fashion Show 2018 நிகழ்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

Singer Fashion Academy இல் டிப்ளோமா கற்கையை தொடரும் மாணவர்களின் வடிவமைப்புக்கள் மற்றும் படைப்புகளை வெளிக்காண்பிக்கும் வருடாந்த நிகழ்வான Singer Fashion Show மற்றும் விருதுகள் நிகழ்வு 2018 அண்மையில் பிஷப் கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. Fashion Show இடம்பெற்ற சமயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருதுகள் நிகழ்வில் அவர்களுடைய முயற்சிகளை அங்கிகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.   

Fashion Show மற்றும் விருதுகள் நிகழ்வு ஆகியன ஆண்டுதோறும் இடம்பெற்றுவருவதுடன், Singer Fashion Academy இன் பிரதான நிகழ்வுகளாகவும் இவை கருதப்படுகின்றன. பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் முன்னிலையில் ஒய்யார நடை (catwalk) மூலமாக டிப்ளோமா மாணவர்கள் தமது படைப்பாக்கத் திறமைகளை காண்பிக்கவும் இது வாய்ப்பளிக்கின்றது.

அதன் மூலமாக அவர்கள் தமது தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வது மட்டுமன்றி, விசாலமான மட்டத்தில் வர்த்தகரீதியான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வழிகோலுகின்றது.  

கண்டிய ஆடையணி, அலுவலக ஆடையணி, சிறுவர்களுக்கான ஆடையணி, ஆண்களுக்கான ஆடையணி, விளையாட்டு ஆடையணி, மாலைப்பொழுது ஆடையணி, வழக்கமான ஆடையணி மற்றும் இந்திய ஆடையணி என 7 கவர்ச்சியான நவநாகரிக பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற Fashion Show நிகழ்வுடன் ஒன்றியதாக விருது வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.

வெற்றியாளர், 2 ஆம் இடத்திற்கான வெற்றியாளர் மற்றும் 3 ஆம் இடத்துக்கான வெற்றியாளர் என்ற தெரிவு அடிப்படையில் fashion show பரிசுகளின் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   

 “எமது பாடநெறிகள் தொடர்பில் பல்வேறு விசேட மேம்பாடுகள் மற்றும் நிகழ்வை அலங்கரிக்கும் வகையில் பல்வேறு புதுமையான நிகழ்வு அம்சங்களுடன் Singer Fashion Show மற்றும் விருதுகள் நிகழ்வு 2018 நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை எமக்கு மிகுந்த பெருமை அளிக்கின்றது. எமது இரு டிப்ளோமா கற்கைநெறிகள் மற்றும் அண்மையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நவநாகரிக வடிவமைப்பு சான்றிதழ் கற்கைநெறி அடங்கலாக ஏனைய 4 பாடநெறிகளும் Charted Society of Designers - UK (CSD) இனால் அதன் பாடநெறி அங்கிகார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அங்கிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அங்கிகாரமானது, உள்நாட்டிலும் சர்வதேசரீதியாகவும் எமது மாணவர்களின் தொழில்வாய்ப்பினை மேம்படுத்துவதுடன், சர்வதேச அங்கீகாரத்துடன் அதியுயர் தர கற்கைநெறிகளையும் உறுதி செய்கின்றது” என்று Singer Business School இன் தலைமை அதிகாரியான கோஷித பெரமுனுகமகே குறிப்பிட்டார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .