2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Sony இலங்கையில் 4K HDR தொலைக்காட்சி தெரிவுகளை விஸ்தரிப்பு

Editorial   / 2017 நவம்பர் 01 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதிய Sony BRAVIA™ தொலைக்காட்சிகள், இலங்கையில் சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி ஊடாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் தனித்துவமான image processor மற்றும் display device தொழில்நுட்பங்களின் இணைப்புடன் 4K HDR (High Dynamic Range) உள்ளடக்கத்தின் மிகச் சிறந்த உபயோகத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளதாக Sony அறிவித்துள்ளது. 

வீடியோ streaming சேவைகள், 4K UHD Blu-Ray, மற்றும் சமீபத்தில் PlayStation®4 gaming ஆகியவற்றின் வருகையுடன் HDR உலகு பாரிய அளவில் விஸ்தரிப்புக் கண்டு வருகின்றது. முன்னெப்போதும் இருந்ததை விடவும், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு உருவாக்குனர்களின் நோக்கங்களுக்கு அமைவாக மிகப் பிரகாசமான படத்தை வெளிக்கொணருவதில் துல்லியமான விம்பவாக்க நடைமுறை முக்கிய பங்கு வகித்து வருகின்றது. Sony நிறுவனத்தின் பிரதான Z உற்பத்தி வரிசையின் கீழான 4K HDR Processor X1™ Extreme அதிசிறந்த அமைப்பு, ஆழம், வர்ணம் மற்றும் தோற்ற மாறுபாடுகளுடன் தத்ரூபமான படத்தை வெளிக்கொணர்ந்து HDR உலகில் கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளமை காரணமாக பரவலாக இனங்காணல் அங்கிகாரத்தைச் சம்பாதித்துள்ளது. தனது புதிய இரு தொலைக்காட்சி உற்பத்தி வரிசைகளுடன், பரந்தளவில் பார்வையாளர்களுக்காக 4K HDR Processor X1™ Extreme உற்பத்தியின் வலுவை Sony நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  

“BRAVIA OLED” என்ற 4K HDR OLED தொலைக்காட்சியினையும் Sony அறிமுகப்படுத்தியுள்ளது. OLED இன் அதிசிறந்த விம்ப தரம் மற்றும் பாரிய முகத்திரை கொண்ட தொலைக்காட்சியைப் பொறுத்தவரையில் உலகின் முதலாவது ஒலியமைப்பான (sound system), X1 Extreme ஆகியவற்றின் இணைப்பு மற்றும் அதன் தனித்துவமான வெட்டு விளிம்பு வடிவம் காரணமாக ஒட்டுமொத்தமாக புதிய காணல் அனுபவத்தை வெளிக்கொணருகின்றது. BRAVIA OLED இன் புத்தாக்கங்கள் நம்பமுடியாத படங்களின் பெறுபேற்றுத்திறனுடன் மட்டும் நின்றுவிடவில்லை. உலகின் முதலாவது பாரிய முகத்திரை கொண்ட தொலைக்காட்சியான A1 உற்பத்தி வரிசை தனது முகத்திரையினூடாகவே மகத்தான ஒலியை வெளிக்கொணரும் ஆற்றல் கொண்டது. OLED இன் பின்னொளி குறைவான அமைப்பின் அனுகூலத்துடன், முகத்திரையிலிருந்து ஒலியை நேரடியாகவே வெளிப்படுத்தும் புதிய Acoustic Surface™ தொழில்நுட்பத்தை Sony தோற்றுவித்துள்ளது. இது பாரம்பரிய தொலைக்காட்சிகளின் மூலமாகப் பெறமுடியாத படம் மற்றும் ஒலியின் நேர்த்தியான ஒருங்கிணைப்புக்கு இடமளிக்கின்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X