2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Takas.lk மூலம் மஹிந்திரா e2o கார்கள் முன்பதிவு

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்திரா e2O மின்சாரக் கார்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்வது தொடர்பில் ஐடியல் மோட்டர்ஸ் (பிறைவட்) லிமிடெட் நிறுவனம் Takas.lk உடன் பங்கான்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புத்தாக்க முயற்சியின் மூலம், முதலாவது மஹிந்திரா e2O வாகனம் விற்பனை செய்யப்பட்டிருப்பதுடன், இந்த மின்சாரக் காரானது தற்பொழுது Takas.lk மூலம் 1,895,000 ரூபாய் பெறுமதியில் கிடைக்கிறது.   

இதற்கு மேலதிகமாக, இந்தக் காரை நீங்கள் வீட்டுக்கு ஓட்டிச் செல்வதற்கு முதலாவது கட்டணமாக 185,000 ரூபாய் மாத்திரமே செலுத்தவேண்டியுள்ளது. Takas.lk இணையத்தளத்தின் ஊடாகக் கார் தொடர்பான விவரக்குறிப்புகள் மற்றும் கட்டணம் செலுத்தும் முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு மிகவும் குறைந்த நிமிடங்களே செலவாகின்றன.  

அத்துடன், பெப்ரவரி மாதத்துக்கான விசேட ஊக்குவிப்பு வசதியாக ஹற்றன் நஷனல் வங்கியின் கடனட்டை உரிமையாளர்களுக்கு Takas.lk 20 சதவீத விலைக்கழிவை வழங்குவதுடன், பூச்சிய வீத வட்டியில் 24 மாத தவணை அடிப்படையில் கட்டணங்களைச் செலுத்துவதற்கும் வழியேற்படுத்திக் கொடுக்கிறது.   

மஹிந்திராவின் முழுமையான மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் காரான மஹிந்திரா e2O அதிகரித்துவரும் நகர சனத்தொகைக்குப் பசுமையான பதிலாக அமைகிறது. சாரதிகள் தமது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக செயற்படுத்தக் கூடிய சிறந்த எதிர்காலத்திட்ட செயலி வசதிகளை உள்ளடக்கியதாக e2O கார் அமைந்துள்ளது. எங்கிருந்தாலும் ரிமோல்ட் மூலம் வாகனத்தை லொக் செய்வதற்கும் அதனை அண்லொக் செய்வதற்குமான வசதிகள், ரிமோட் மூலம் வாயுசீராக்கியை இயக்குவது, காரின் பற்றரி மட்டம், அதன் நிலைமைகளை அறிந்துகொள்வது போன்ற விசேட வசதிகளைச் செயலி கொண்டிருக்கும். 

குறித்த இலக்கைச் சென்றடைவதற்கு முன்னர் பற்றரியில் சார்ஜ் இல்லாது சென்றுவிடும் நிலைமை காணப்பட்டால், சாரதிகள் தமது கையடக்கத்தொலைபேசி செயலி மூலம் பற்றரியின் சார்ஜை முற்கூட்டியே சேமிக்க முடியும். இது மேலதிகமாக 10 கிலோமீற்றர் வரை செல்வதற்கான சக்தியைக் கொடுக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .