2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

Union Pay இன்டர்நஷனலுடன் செலான் வங்கி கைகோர்ப்பு

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

UnionPay கடன், பற்று அட்டைகளைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு செலான் வங்கியின், விற்பனை பகுதி (POS) வலையமைப்பை பயன்படுத்தி நிதிக் கொடுக்கல் வாங்கல்களை உள்நாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

சீனா, உலகின் ஏனைய பாகங்களைச் சேர்ந்த UnionPay அட்டைதாரர்களுக்கு நாடு முழுவதிலும் காணப்படும் செலான் வங்கியின் 210 ATM இயந்திரங்களிலிருந்து பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் காணப்படும் 15,000க்கும் அதிகமான செலான் வங்கியின் உயர் பாதுகாப்பான MPAY/POS கட்டமைப்பினூடாக அட்டைக் கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் நிலையங்களில் தமது அட்டைகளை பயன்படுத்த முடியும்.  

இந்தப் பங்காண்மை தொடர்பாக, செலான் வங்கியின் வாடிக்கையாளர் வங்கிச் சேவைப் பிரிவின் பதில் பொது முகாமையாளர் திலான் விஜேசேகர கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் பங்காண்மையினூடாக, UnionPay அட்டைதாரர்களுக்கு பரந்தளவு அட்டை ஏற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதுடன், உள்நாட்டு விற்பனையாளர்களுக்குத் தமது சேவை வழங்கல்களை விஸ்தரிக்கவும், தமது வியாபாரங்களை வளர்த்துக் கொள்ளவும் வலுச்சேர்த்துள்ளது. உள்நாட்டு சுற்றுலாத்துறைக்கும் வியாபாரத்துறைக்கும் சுற்றுலாப் பயணிகளின் வரவை ஊக்குவித்து உதவிகளை வழங்குவது மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு சீன நாட்டவர்களின் பங்களிப்பை பெற்றுக் கொடுப்பது என்பது எமது நீண்ட கால நோக்கமாக அமைந்துள்ளது. மேலும், நாட்டின் மாபெரும் MPOS வலையமைப்பைக் கொண்ட வங்கி எனும் வகையில் உள்நாட்டு பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை மேலும் மேம்படுத்துவதற்கு பெறுமதி சேர்க்கப்பட்ட டிஜிட்டல் வங்கிச் சேவைகளை சேர்த்து, சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் நுண் நிதியியல் துறையில் பங்களிப்பை சேர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்துகிறோம். மேலும், நாடளாவிய ரீதியில் காணப்படும் ATM வலையமைப்புக்கு மேலதிகமாக புதிய பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பண சுழற்சி இயந்திரங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளோம். இவை எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு பரிபூரண வங்கி அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளன” என்றார்.   

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தரவுகளின் பிரகாரம், 2018 ஆகஸ்ட் மாதம் சீனாவிலிருந்து இலங்கைக்கு 200,359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.9 சதவீத அதிகரிப்பாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X