2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Vivo V11Pro AI திறன்பேசி அறிமுகம்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

Vivo இலங்கையில் தனது புதிய அலைபேசி தெரிவுகளான Vivo V11Pro ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய AI- வலுவூட்டப்பட்ட புகழ்பெற்ற V தெரிவுகள், AI கமெராவுடன் காணப்படுவதுடன், பாவனையாளர்களுக்கு சிறந்த படத்தை எந்தத் தருணத்திலும் எடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. AI சேவைகளினூடாக, மதிநுட்பமான, எளிமையான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும்.

Vivo வின் V11Pro இல், சிறந்த வடிவமைப்புகள் உள்ளடங்கியுள்ளதுடன், புதிய Halo FullView™ டிஸ்பிளே அடங்கியுள்ளது. Starry Night வர்ணத்தில் வரும் Vivo V11Pro, வளைந்த 3D body கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன், சிறந்த பாவனையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. V11Pro என்பது, V தெரிவு கட்டமைப்புக்கான In-Display Fingerprint Scanning தொழில்நுட்பம் அடங்கியுள்ளதுடன், பயோமெட்ரிக் பாதுகாப்பில் Vivo இன் தொழில்நுட்ப தலைமைத்துவ நிலையை தொடர்ந்து உறுதி செய்துள்ளதுடன், கவர்ச்சியான மற்றும் அழகிய வடிவமைப்பையும் கொண்டுள்ளது.  

Vivo மொபைல் லங்கா பிரைவட் லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களை கவனத்தில் கொண்டு புத்தாக்கங்களை முன்னெடுப்பது என்பது எமது இலக்காகும். AI- வலுவூட்டப்பட்ட V11Pro ஐ அறிமுகம் செய்வதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், எமது பாவனையாளர்களுக்கு மிகவும் பிரத்தியேகமான அனுபவத்தை ஏற்படுத்தவும் எண்ணியுள்ளோம். இதை கவனத்தில் கொண்டு சிறந்த புகைப்படங்களை எமது AI கமரா உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், மதிநுட்பமான AI சேவைகள் அடங்கியுள்ளதுடன், துறையில் முன்னோடியாக திகழும் In-Display Fingerprint Scanning தொழில்நுட்பத்தை V தெரிவுகளில் முதல் தடவையாக அறிமுகம் செய்துள்ளோம். உலகின் வெவ்வேறு பாகங்களில் காணப்படும் மேலும் பல வாடிக்கையாளர்களுக்கு புதிய புத்தாக்கங்கள் மற்றும் சிறந்த அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X