2024 மார்ச் 28, வியாழக்கிழமை

Xiaomi இலங்கையில் அறிமுகம்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

Xiaomi இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகமாகின்றமை தொடர்பில் அறிவித்துள்ளது. 

நிறுவனம் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ள நான்கு கமெராக்களைக் கொண்ட திறன்பேசியான Redmi Note 6 Pro இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், மிகச் சிறந்த அளவில் விற்பனையாகி வருகின்ற POCOPHONE F1, Mi A2, Mi A2 Lite, Redmi S2, Redmi 6 மற்றும் Redmi 6A ஆகிய உற்பத்தி வரிசையை இலங்கையில் அறிமுகப்படுத்துகின்றமை தொடர்பிலும் அறிவித்துள்ளது.  

Redmi திறன்பேசிகள் மிக நீண்ட காலத்துக்கு நின்றுபிடிக்கும் மின்கலங்களுக்குப் பெயர்பெற்றுள்ள நிலையில், Redmi Note 6 Pro ஆனது இரு தினங்களுக்கு நீடித்து உழைக்கும் மின்கலத்தைக் கொண்டுள்ளது. இத்துறையில் முதன்முறையாக AI (செயற்கை நுண்ணறிவு) வலுவூட்டப்பட்ட, நான்கு கமெராக்களைக் கொண்ட அனுபவத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

POCOPHONE F1 ஆனது அதன் பிரதான Qualcomm® Snapdragon™ 845 தளமேடையைக் கொண்டுள்ளதுடன், தொழிற்துறையில் முன்னிலை வகிக்கின்ற LiquidCool Technology cooling system தொழில்நுட்பம் மற்றும் நீடித்து உழைக்கும் 4000mAh மின்கலம் ஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

Xiaomi India நிறுவனத்தின் இந்திய துணைக்கண்டத்துக்கான வெளிநாட்டு விஸ்தரிப்புத் துறை தலைமை அதிகாரியான சங்கீத் அகர்வால் கூறுகையில், “Xiaomi எப்போதுமே எல்லைகளுக்கு அப்பால் சிந்திப்பதை முன்னெடுத்து, எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் உயர் மட்ட புத்தாக்கத்தை வழங்கி வருகின்றது. எமது உண்மையான கோட்பாட்டை நிலைநிறுத்துகின்ற சந்தையில் பல்வேறு புதிய திறன்பேசிகளை அறிமுகப்படுத்தி வைப்பதையிட்டு நாம் மிகுந்த பெருமை அடைந்துள்ளோம். இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான எமது Mi அபிமானிகளுக்காக Xiaomi இனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைப்பது எமக்கு பெருமகிழ்ச்சி அளிக்கின்றது. கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் திறன்பேசி சந்தையானது மகத்தான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், உள்நாட்டுத் தொழிற்துறைக்கு பங்களிப்பாற்றுவதை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். இங்குள்ள மில்லியன் கணக்கான எமது Mi அபிமானிகளை நாம் நேசிப்பதுடன், இச்சந்தையில் Xiaomi அழகான வரலாற்றை கட்டியெழுப்பும் நம்பிக்கை கொண்டுள்ளோம்”  என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X