2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

eZ Cash மூலமாக ‘Scan & Pay’ QR செயன்முறை அறிமுகம்

Editorial   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மொபைல் பண மற்றும் கொடுப்பனவு சேவையான eZ Cash, தனது eZ Cash app இல் Quick Response (QR) குறியீடு செயன்முறையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் முதல் தடவையாக eZ Cash app இல் ‘Scan to Pay’ மற்றும் ‘Scan to Transfer’ சேவைகள் திறன்பேசி ஊடாக செயற்படுத்தப்பட்டுள்ளன. eZ Cash இலங்கையில், மொபைல் கொடுப்பனவு தொழில்நுட்ப புத்தாக்கத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது. 

2015இல் மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் சிறந்த மொபைல் பண சேவைக்கான சர்வதேச விருதை சுவிகரித்திருந்ததுடன், உலகின் முதலாவது inter-operable மொபைல் பண சேவையாகவும் திகழ்கிறது.

தற்போது eZ Cash சேவையைப் பயன்படுத்தும் தனது 16 மில்லியன் டயலொக், எடிசலாட், ஹட்ச் மற்றும் எயார்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த வசதியைச் செயற்படுத்தியுள்ளது. 

இந்தப் புதிய eZ Cash QR ‘Scan & Pay’ ஊடாக வாடிக்கையாளர்களுக்கு இலகுவான முறையில் தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும் என்பதுடன், முன்னொருபோதுமில்லாத வகையில் மிகவும் சௌகரியமான முறையில் சிரமங்களின்றி பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போதும், பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போதும் கொடுப்பனவுகளை QR குறியீடு முறை ஊடாக மேற்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

இந்தக் குறியீடு QR அடிப்படையிலான “Scan & Pay” உள்ளம்சம் தற்போது எந்தவொரு திறன்பேசியிலும் eZ Cash app ஊடாக பெற்றுக்கொள்ளலாம். எந்தவொரு eZ Cash வாடிக்கையாளருக்கும் பணத்தை மற்றுமொரு eZ Cash வாடிக்கையாளருக்கு அனுப்ப முடியும் அல்லது நாடளாவிய ரீதியில் காணப்படும் eZ Cash சேவையை கொண்ட விற்பனை நிலையங்களில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம். இதன் போது QR குறியீட்டை பெறுநரிடம் ஸ்கான் செய்ய வேண்டும்.  

eZ Cash வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள், தமது பிரத்தியேகமான QR குறியீட்டை தமது eZ Cash app இல் டவுன்லோட் செய்து கொண்டு, அவற்றை தமது app இல் பேண முடியும் அல்லது அச்சுப்பிரதி எடுத்து காட்சிப்படுத்தவும் முடியும். இந்த “Scan & Pay” உள்ளம்சத்தின் சௌகரியமான உள்ளடக்கமாக, சேவை பெறுநரின் மொபைல் இலக்கம் அல்லது விற்பனை நிலையத்தின் அடையாள இலக்கம் எதையும் பதிவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. 

இந்த விவரங்கள் டிஜிட்டல் முறையில் QR குறியீட்டில் உள்வைக்கப்பட்டுள்ளது. மேலும் மொபைல் ஊடாக டிஜிட்டல் முறையில் கொடுப்பனவொன்றை மேற்கொள்வதற்கான கால விரயமும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.eZ Cash QR ‘Scan & Pay’ இனூடாக தனிநபர்களுக்கிடையில் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்குநர்களுக்குமிடையில் மேற்கொள்ளப்படும் பண கொடுக்கல் வாங்கல் முறையில் புரட்சி ஏற்படுத்தப்படும் என்பதுடன், பல மில்லியன் கணக்கான திறன்பேசி பாவனையாளர்களான தனிநபர்கள், சேவை வழங்குநர்கள் அல்லது விற்பனையாளர்கள் தமக்கிடையே கொடுக்கல் வாங்கல்களை ‘Scan & Pay’ ஊடாக மேற்கொள்ள முடியும்.   

புரட்சிகரமான மொபைல் பணப் பரிமாற்றல் சேவை மற்றும் மொபைல் ஊடான கொடுப்பனவு சேவையாக அமைந்துள்ளதுடன், eZ Cash ஊடாக மேற்கொள்ளப்படும் ‘Scan & Pay’ கொடுப்பனவுகள் உயர் மட்ட மொபைல் கொடுப்பனவு பாதுகாப்பு நியமங்களை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கும். சகல கொடுக்கல் வாங்கல்களும் PIN இலக்கத்தினூடாக பாதுகாக்கப்படும் என்பதுடன், 3DES என பரந்தளவில் அறியப்பட்ட Triple Data Encryption Algorithm இனால் உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் உறுதி செய்யும் SMS ஒன்றும் இரு தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

இந்தச் சேவை அறிமுக கட்டமாக, தற்போது தெரிவு செய்யப்பட்ட eZ Cash சேவையை கொண்ட விற்பனை நிலையங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. eZ cash QR ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களுக்கு 10% பண மீளளிப்பு விலைக்கழிவு வழங்கப்படுகின்றன. இந்தச் சேவை எதிர்வரும் காலங்களில் 20,000க்கும் அதிகமான விற்பனை நிலையங்கள் மற்றும் சிறியளவிலான விற்பனை நிலையங்களுக்கும் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும்.  

இந்தப் புதிய QR Code உள்ளம்சம் தொடர்பில் டயலொக் அக்ஸியாடா பிஎல்சியின் டிஜிட்டல் சேவைகள் உப தலைவர் பாரிக் காதர் தெரிவிக்கையில், “இலங்கையில் காணப்படும் சகல மொபைல் ஊடான கொடுப்பனவுகளில் eZ Cash முன்னிலையில் திகழ்கிறது. QR குறியீட்டின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு eZ Cash விற்பனை நிலையங்களில் தமது கொடுக்கல் வாங்கல்களை சௌகரியமான முறையில் மேற்கொள்ள முடியும். பாரம்பரிய கொடுக்கல் வாங்கல் முறைகளுக்கு அப்பாற்பட்ட உள்ளார்ந்த கொடுப்பனவுத் தீர்வின் அடுத்த கட்டமாக இது அமைந்துள்ளது” என்றார்.

eZ Cash சேவைக்கு பதிவு செய்து கொள்ள அல்லது டயலொக், எடிசலாட், ஹட்ச் மற்றும் எயார்டெல் மொபைல் வலையமைப்புகளினூடாக ஏற்கெனவே eZ Cash சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ‘Scan & Pay’ சேவைக்கு தம்மை பதிவு செய்து கொள்ள, திறன்பேசியிலுள்ள App Store அல்லது Google Play இல் காணப்படும் eZ Cash app ஐ டவுன்லோட் செய்யலாம். தமது eZ Cash கணக்கில் பணத்தை வைப்புச் செய்வதற்கு நாடு முழுவதிலும் காணப்படும் விற்பனை நிலையங்கள், டயலொக், எடிசலாட்,  ஹட்ச் கிளைகளில் காணப்படும் Pay&Go kiosks அல்லது கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, PABC, தேசிய சேமிப்பு வழங்கி போன்றவற்றின் ஒன்லைன் கட்டமைப்புகளை அணுக முடியும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .