2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

nova2i மூலமாக முக இனங்காணல் தொழில்நுட்பம் அறிமுகம்

Editorial   / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

Huawei, தனது சமீபத்தைய திறன்பேசி உற்பத்தி வரிசையான Huawei nova2i மூலமாக முக இனங்காணல் தொழில்நுட்ப அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   

Huawei திறன்பேசியில் முக இனங்காணல் தொழில்நுட்ப அம்சம் அறிமுகமாகின்ற முதலாவது சந்தர்ப்பமாக இது மாறியுள்ளதுடன், தற்போது nova 2i ஐக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் நவீன மென்பொருள் வடிவத்துக்குப் புதுப்பித்துக் கொள்வதன் மூலமாக இதைப் பெற்றுக்கொள்ள முடியும்.   

Huawei இன் முதலாவது நான்கு கமெரா (quad camera) மற்றும் முழுமையான முகத்திரைத் தோற்றத்தைக் (FullView Display) கொண்ட தொலைபேசியாக nova2i அண்மையில் சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது. மத்திய வகுப்பு முன்னணி திறன்பேசி உற்பத்தி வரிசையில் 13 megapixel கமெராவுடன் மிகச் சிறந்த தொலைபேசியாக nova2i கருதப்படுகின்றது.   

Huawei nova 2i சந்தையில் அறிமுகமாகுவதற்கு முன்பதாகவே வாடிக்கையாளர்களிடமிருந்து பலத்த கேள்வியை சம்பாதித்திருந்தது. தற்போது இலங்கையில் அதிக அளவில் விற்பனையாகும் திறன்பேசி வர்த்தகநாமங்களுள் ஒன்றாக இது திகழ்ந்து வருகின்றது. சர்வதேச ரீதியாக இந்தத் திறன்பேசி 3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.   

Huawei nova2i இன் நவீன மென்பொருள் புதுப்பித்தல் நடைமுறையை மிகவும் சௌகரியமாக மேற்கொள்ள முடியும். power பட்டனை அழுத்துவதன் மூலமாக தொலைபேசியின் முகத்திரையை unlock செய்து விரல் அடையாள சென்சார் தெரிவை உபயோகிப்பதற்குப் புறம்பாக முகத்திரையை unlock செய்வதற்கு முக இனங்காணல் தொழில்நுட்பத்தை உபயோகிக்க முடியும்.   

Huawei nova2i ஆனது சாதனத்தை unlock செய்வதற்கு 800 மில்லிசெக்கன்களே எடுக்கும் வகையில் வேகமான unlock தொழிற்பாட்டைக் கொண்டுள்ளது. சந்தையிலுள்ள இதையொத்த ஏனைய பல திறன்பேசித் தெரிவுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிவேகமான தொழிற்பாடாகும்.   

இந்த அறிமுகமானது சௌகரியத்தை உறுதிசெய்து, ஒருவருடைய திறன்பேசியை விரைவாக அடைந்துகொள்வதற்கு வழிகோலியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .