2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அட்லஸ் சூட்டி பாவனையாளர்களுக்குப் பரிசுகள்

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்லஸ் சூட்டி ரஹசக் தேகி கொடக் (அட்லஸ் சூட்டி இரகசியம் அன்பளிப்புகள் ஏராளம்) எனும் ஊக்குவிப்புத் திட்டத்தை அட்லஸ் அக்சிலியா அண்மையில் முன்னெடுத்திருந்தது. அட்லஸ் சூட்டி ஆர்வலர்களுக்கு மூன்று வெற்று ரீஃபில்களை அனுப்பி வைக்குமாறு கோரியிருந்ததுடன், இவ்வாறு அனுப்பியிருந்த சகலரும் வெற்றியாளர் தெரிவில் உட்படுத்தப்பட்டிருந்தனர். இதில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு லப்டொப்கள், நீரினுள் பயன்படுத்தக்கூடிய கமெராக்கள் மற்றும் தொலைக்காட்டிகள் போன்ற பெறுமதி வாய்ந்த பரிசுகளுடன், ரூ. 1000 பெறுமதியான அன்பளிப்பு வவுச்சர்களும் வழங்கப்பட்டன. பேலியகொடயில் அமைந்துள்ள அட்லஸ் அக்ஸிலியா தலைமையகத்தில் இந்த வெற்றியாளர் தெரிவு இடம்பெற்றது. இதில் அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இலங்கையின் பேனா சந்தையில் பிரவேசித்து, தற்போது உள்நாட்டில் பேனாக்களின் ஒரே உற்பத்தியாளராக திகழும் அட்லஸ், ஒப்பற்ற எழுதும் அனுபவத்தை வழங்குவதுடன், வேகமாகவும் மிருதுவானதான எழுதும் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றது. இந்த சிறந்த எழுதும் அனுபவத்தினூடாக மாணவர்களுக்கு தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வலுச்சேர்க்கப்படுவதுடன், ஆக்கபூர்வமாக திகழவும் ஊக்குவிக்கின்றது. 

சர்வதேச தரங்களுக்கமைய அட்லஸ் பேனைகள் தயாரிக்கப்படுவதால், சர்வதேச சந்தைகளில் போட்டியிடக்கூடிய வகையில் அமைந்துள்ளன. 2000 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட அட்லஸ் சூட்டி, இலங்கையில் அதிகளவானோர் விரும்பும் பேனையாக கடந்த 20 வருட காலமாக திகழ்கின்றது. பேனைகளுக்காக ஆய்வு மற்றும் விநியோக வசதியை பேணும் இலங்கையின் ஒரே நிறுவனமாக அட்லஸ் அக்ஸிலியா திகழ்கின்றது. தரத்தின் மீது நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பினூடாக, நுகர்வோரின் உள்ளங்களில் அட்லஸ் சூட்டியை முன்னிலையில் திகழச் செய்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .