2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அனைத்து மாவட்டங்களிலும் வியாபாரச் சேவை நிலையங்கள்

Editorial   / 2020 ஜூலை 02 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இயங்கும் 40% க்கும் அதிகமான நுண், சிறிய, நடுத்தர அளவு தொழில் முயற்சியாளர்கள் பதிவு செய்யப்படாமல் செயற்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்துக் கொள்வது, கடன் அனுமதிகள் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது மிகவும் கடினமான காரியமாக அமைந்துள்ளது. பெண் தொழில் முயற்சியாளர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன், இலங்கையில் வியாபாரங்களைப் பதிவு செய்வது என்பது மிகவும் இலகுவாக்கப்படவுள்ளது. நாடு முழுவதிலும் வியாபார சேவை நிலையங்களை நிறுவுவதற்கான அனுமதியைச் சிறிய, நடுத்தர அளவிலான தொழிற்றுறை, தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்கு அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த நிலையங்களினூடாக வியாபார ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகள் இலகுபடுத்தப்படுவதுடன் வியாபார உதவிச்சேவைகளும் வழங்கப்படும்.  

இந்த வியாபார சேவை நிலையங்களினூடாக, வியாபாரப் பதிவு செயன்முறையை எளிமைப்படுத்துவதுடன், தொழில்நுட்பம், தரக் கட்டுப்பாடு, சந்தைகளை அணுகல் போன்ற செயற்பாடுகளுக்கு உதவிகள் வழங்கப்படும். நுண், சிறிய, நடுத்தரளவு  தொழில் முயற்சியாளர்களுக்குச் சேவையளிக்கும் வகையில் வியாபார அபிவிருத்திச் சேவை வழங்குநர்கள், ஒழுங்குபடுத்தல் அதிகார அமைப்புகள், நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள்,  வங்கிகளுடன் தொடுக்கப்பட்ட இணையக் கட்டமைப்பொன்று வடிவமைக்கப்படும்.  

இந்தச் சேவை நிலையங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களில் நிறுவப்படும். மாவட்ட மட்டத்தில் சேவை வழங்குவோர், இந்த நிலையங்களுடன் இணைந்து செயலாற்றுவதனூடாகத் தேவைப்படும் சேவைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.   

இந்தச் சேவை நிலையங்களை நிறுவுவதற்காக கிறிசலிஸ், பிரிட்டிஷ் கவுன்சில், CARE ஜேர்மனி ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து, முன்னாள் தொழிற்றுறை, வணிக அமைச்சுடன் பணியாற்றியிருந்தன. முதற்படியாக, மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நான்கு வியாபார சேவை நிலையங்கள் நிறுவப்படும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .