2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அபான்ஸில் LG இன் அதிநவீன SmartThinQ

Editorial   / 2018 ஜூன் 04 , மு.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் வீட்டை ‘நாளைய தினத்தின் கனவு இல்லமாக’ மாற்றப்போகும் அதிநவீன LGSmartThinQ உற்பத்திகளின் அணிவகுப்பை இலங்கையில் முதல் முறையாக அபான்ஸ் அறிமும் செய்துள்ளது. 

தன்னியக்கமாக இயங்கும் இந்த உற்பத்திகள் 2018 LG InnoFest Roadshow   நிகழ்ச்சியின் போது, அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இவ்வனைத்து உற்பத்திகளும் எதிர்வரும் மாதங்களில் அங்கிகாரம் கொண்ட அபான்ஸ் கிளைகளில் பெற்றுக்கொள்ளமுடியும்.  

LG SmartThinQ உற்பத்திகளில் UHD மற்றும் OLED தொலைக்காட்சிகள் TWINWash, InstaViewஇன்-டோகுளிர்சாதனப்பெட்டிகள் மேம்படுத்தப்பட்ட உற்பத்திகளாக விற்பனைச் சந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

புதிதாகஅறிமுகம் செய்யப்படவுள்ள SmartThinQ உற்பத்தியான V30S ThinQ ஸ்மார்ட் அலைபேசிகள்,24 hi-tech அங்குல ட்ரயர் மற்றும் SKY10  சவுண்ட் பார் மற்றும் ஹோம் ஸ்பீக்கர்கள் ஆகும்.  

SmartThinQ உற்பத்திகளின் அணிவகுப்பே LG அறிமுகம் செய்த புதிய உற்பத்திகளாகும். Internet of Things (IoT) கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, எராளமான LG உற்பத்திகளுக்கு இடையில் டிஜிட்டல் உள் இணைப்பை இணையத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

SmartThinQ தொழில்நுட்பம் மூலம் பல்வேறு LG உற்பத்திகளை மிகவும் இலகுவாகக் கையாளக்கூடிய வசதியை இது வழங்குவதோடு,சத்தத்தைக் கூட்டிக்குறைக்கும் வசதி, எத்தனை முறை சலவை செய்ய வேண்டும் என்பதைச் செயற்படுத்தக்கூடிய வசதியுடன் பல சேவைகளைச் செய்யக்கூடிய வசதிகள் உள்ளன.  

இதன்போது வாடிக்கையாளர்கள் இரண்டு மாற்று வழிகளைத் தெரிவுசெய்ய முடியும். SmartThinQApp இனைப் பயன்படுத்தவும் அல்லது Google Assistant மற்றும் Amazon Alexa மூலம் Voice Function பயன்படுத்துவதற்கான வசதி உள்ளது. 

SmartThinQ App யை Google Play Store அல்லது Apple App Store ஊடாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.நீங்கள் வீட்டுக்கு வெளியே இருக்கும் சந்தர்ப்பங்களில் இந்த உற்பத்திகளை உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தக்கூடிய வசதி உள்ளது. 

ஒருசிறிய தொழில்நுட்பக் கோளாறையும் இதன் மூலம் இனங்காண முடியும். 
இயந்திரத்தை தொடாமல் Voice Command மூலம் உங்களுக்குத் தேவையான கட்டளைகளைப் பிறப்பித்து, இயந்திரத்தை செயற்படுத்த முடியும்.  

அல்ட்ரா HD மற்றும் OLED தொலைக்காட்சிகளின் தொலையியக்கி SmartThinQ தொழில்நுட்பத்தில் இயங்குவதோடு, இதிலுள்ள Natural Language Processing (NLP) மூலம் வழங்கப்படும் Voice Command கட்டளைகளை இது புரிந்து கொள்வதால் Voice Command மூலம் இயக்க முடியும். 

இதற்கமைய நீங்கள் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள், கிரிக்கெட் தகவல்கள் மற்றும் உங்களுக்குப் பிடித்த வேறு  நிகழ்ச்சிகளை மிகவும் இலகுவாகப் பார்த்து இரசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு வாய்க்கப் பெறுகின்றது.  

LG நிறுவனத்தின் உதவியோடு இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சுவாரஷியங்களையும் சொகுசான வாழ்க்கையையும் தரக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை அபான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

 LG SmartThinQ உற்பத்திகளை எதிர்காலத்தில் சகல அபான்ஸ் மற்றும் அபான்ஸ் எலைட் காட்சியறைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X