2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க டொலர் 192 ரூபாய்

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விற்பனை பெறுமதி வெள்ளிக்கிழமை ரூ. 191.99 ஆக பதிவாகியிருந்தது. வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்று 192 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலகளாவிய ரீதியில் COVID 19 பரவலுடன் சர்வதேச ரீதியில் நாடுகள் முடங்கியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரும் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி செலவீனம் அதிகரித்துள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புகைகளும் குறைவடைந்துள்ளமையின் காரணமாக, அமெரிக்க டொலருக்கு சந்தையில் காண்படும் கேள்வி அதிகரித்துள்ளமையால் ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நாணயமாற்று முகவர் ஒருவர் தமிழ் மிரருக்கு தெரிவித்திருந்தார்.

அமெரிக்க டொலரைப் போன்று, ஐக்கிய இராஜ்ஜிய ஸ்ரேளிங் பவுண் ஒன்றின் விற்பனை விலையும் அதிகரித்து 236.74 ரூபாயாக பதிவாகியிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X