2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அலுவலக கொடுமைகள்: உதவு நூல் வெளியீடு

Princiya Dixci   / 2017 மே 08 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள தொழிற்துறை சார்ந்தவர்கள், கொடுமைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்ற போது, அதனை கையாளுவதற்கான சுய உதவு வழிகாட்டல் நூல் ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்துறையாளரான ஃபியோனா நாணயக்கார, இலங்கை பணியக கலாச்சாரத்தில் இடம்பெறும் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதனை எதிர்த்து போராடுவதற்கான வழிமுறைகள் மற்றும் உபாயங்களைக் கொண்ட 'அலுவலக கொடுமைகள் - எனது பார்வை' என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

அலுவலக கொடுமைகளுக்கு முகங்கொடுக்கின்ற பணியாளர்களுக்கு சுய உதவு வழிகாட்டி நூலாக 'அலுவலக கொடுமைகள் - எனது பார்வை' என்ற நூல் அமைந்துள்ளதுடன், வெளிச்சத்திற்கு வராமல் ஊமையாக உள்ள இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதே இதன் நோக்கமாகும். இந்நூல் மூன்று மாறுபட்ட நிலைகளைக் கொண்டுள்ளது.

இப்பிரச்சனைக்குத் தீர்வாக, முதலாவது சுய உதவு வழிகாட்டியாக அமைந்துள்ள இந்நூலை வெளியிடுவதற்கு ஊக்குவித்த காரணி என்ன என்பது தொடர்பில் அவரிடம் வினவிய சமயத்தில், இலங்கையில் அலுவலகங்களில் இடம்பெறும் கொடுமைகளுக்கு முகங்கொடுக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சிதரும் அளவில் உயர்வாகக் காணப்படுகின்றது' என்று நாணயக்கார குறிப்பிட்டார். சிறுவர்களை 'கொடுமைப்படுத்துவதற்கு' எதிராக அதனை துடைத்தெறிந்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சர்வதேச அளவில் எண்ணற்ற முயற்சிகளும், வழிமுறைகளும் காணப்படுகின்றன.

அலுவலக கொடுமைகள் - எனது பார்வை என்ற நூலின் விற்பனை மூலமாக திரட்டப்படுகின்ற ஒட்டுமொத்த தொகையும் அலுவலக கொடுமைகளைப் போக்குவதற்கு, வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் பகிரங்க கலந்துரையாடலை ஊக்குவித்து, விழிப்பணர்வைத் தோற்றுவிப்பதற்கு உபயோகிக்கப்படும் என நாணயக்கார உறுதிமொழியளித்துள்ளார்.

இலங்கையின் வர்த்தக உலகில் கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ள நாணயக்கார, விரைவாக விற்றுத் தீருகின்ற நுகர்வோர் உற்பத்தி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் உற்பத்தி என பல்வேறு துறைகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்கள் தொடர்பில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். தான் எழுதியுள்ள விடயம்  தொடர்பில் உண்மைகளை ஒப்புவிப்பதற்காக தனது ஆராய்ச்சியை ஆரம்பத்தில் தொடங்கியிருந்த நாணயக்கார அவர்கள், வாசிப்பவர்களுக்கு மேலும் பயனளிக்கும் வகையில், சர்வதேச ரீதியாக கிட்டத்தட்ட 50% ஆகவும், அமெரிக்காவில் 75% என்ற உயர்ந்த வீதத்திலும் அலுவலக கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன என்ற அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவையும் பகிர்ந்துள்ளர். 'அலுவலக கொடுமைகள் - எனது பார்வை என்ற நூலை எழுதும் போது நான் மேற்கொண்ட அதிகளவான ஆராய்ச்சிகள் மூலமாக கொடுமைகளை சமாளிப்பதற்கு உபயோகிக்கக்கூடிய நடைமுறை உபாயங்கள் தொடர்பில் நான் அதிகமாக கற்றுக்கொண்டதுடன், அதனை உடனடியாக சமூகத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என உணர்ந்து கொண்டேன்,' என குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .