2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆண்டுக்குரிய மக்கள் சேவை வர்த்தக நாமமாக இலங்கை வங்கி

Editorial   / 2018 மார்ச் 18 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018 ஸ்லிம்-நீல்சன் மக்கள் விருது விழாவில் ‘ஆண்டுக்குரிய மக்கள் சேவை வர்த்தக நாமம்’ என்ற பெருமையை வழங்கி இலங்கை வங்கியை உயர்த்திய மக்களின் உண்மையான குரலான People’s Choice தொடர்பில், சகல இலங்கையர்களுக்கும் இலங்கை வங்கி நன்றி தெரிவிக்கிறது.   

இதனை இலங்கையின் தேசிய சந்தைப்படுத்தல் அமைப்பான இலங்கை சந்தைப்படுத்தல் (SLIM) நிறுவனமும், நீல்சன் கம்பனி (லங்கா) தனியார் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன. இலங்கையில் பிரபலம் பெற்ற வர்த்தக நாமங்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.   

உலகில் புகழ்பெற்ற பல்தேசிய சந்தைப்படுத்தல் ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான நீல்சன் கம்பனி (லங்கா) தனியார் நிறுவனத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் விருதுக்குரியவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். இந்தச் சுயாதீன ஆய்வானது, ஒரு வர்த்தக நாமம் மக்களுடன் கொண்டுள்ள பிணைப்பையும் மக்களுடனான தொடர்பாடலின் பயனுறுதி வாய்ந்த தன்மையையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.   

ஒவ்வொரு வருடமும் நீல்சன் நிறுவனம் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் 15 இற்கும், 60 இற்கும் இடைப்பட்ட வயதுடைய பிரஜைகளை உள்ளடக்கும் வகையில் பாரிய அளவிலான ஆய்வை நடத்துகிறது. இவர்கள் நேர்காணப்படுவதுடன், பல்வேறு துறைகளில் தமக்கு விருப்பமான வர்த்தக நாமத்தை ஞாபகப்படுத்துமாறு இவர்களிடம் கேட்கப்படும்.   

‘ஆண்டுக்குரிய மக்கள் சேவை வர்த்தக நாமம்’ என்ற விருதுக்கு அப்பால், இலங்கை வங்கி ஆனது ஏனைய முக்கியமான விருதுகள் பலவற்றுக்குப் பரிந்துரைக்கப்பட்டதுடன், இவ்விழாவின் அதியுயர் விருதான ‘ஆண்டுக்குரிய மக்களின் வர்த்தக நாமம்’ என்ற விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நான்கு நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது.   

“இந்த வெற்றியானது இலங்கை வங்கி வர்த்தக நாமத்தை சிறப்பாக்குவதற்கும், அதை மக்கள் மத்தியில் நிலைநிறுத்துவதற்கும் நாம் மேற்கொண்ட முதலீடுகளும் எமது மூலோபாய சிந்தனைகளும் பலன் தந்துள்ளமைக்கு ஆதாரமாகும். மக்களின் மெய்யான குரல் மூலம், இலங்கை வங்கி வர்த்தக நாமத்தைப் புகழ்பெற்ற வர்த்தக நாமமாக மாற்றுவதற்கு கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய எமது சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகநாம குழுவுக்கும் ஒட்டுமொத்தப் பணியாளர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவிக்கின்றேன். மேலும், எம்முடன் இணைந்திருந்து எமது தனிச்சிறப்புக்கான பயணம், வீடுகள் தோறும் வங்கிக்கான வர்த்தக நாமமாக இலங்கை வங்கி மாறுவதற்கு உதவிய பெறுமதி மிக்க வாடிக்கையாளர்கள் அடங்கலாக சகல இலங்கையர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று பொது முகாமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் செனரத் பண்டார தெரிவித்தார்.   

இலங்கை வங்கி என்ற வர்த்தக நாமம் தொடர்ச்சியாகக் கடந்த ஒன்பது வருடங்களாக Brand Finance Sri Lanka வின் மூலம் இலங்கையின் முதற்தர வர்த்தக நாமமாகப் பெயரிடப்பட்டதுடன், உலகின் மிகப்பெரிய மற்றும் செல்வாக்குமிக்க உலக வர்த்தக நாம ஆலோசனை முகவராண்மையான InterBrand இன் ‘இலங்கையின் சிறந்த வர்த்தக நாமங்கள்’ என்ற அங்குரார்ப்பண மாநாட்டிலும் இது வலியுறுத்தப்பட்டது.   

இலங்கை சமுதாயத்தில் இலங்கை வங்கி கொண்டுள்ள செல்வாக்கை கருத்திற்கொண்டு, CMO Council Asia பேரவையானது 2017-2018ஆம் ஆண்டுக்குரிய Master Brand என்ற அந்தஸ்தை வழங்கியது.  

நிலைமாற்றத்தின் மூலம் பெற்ற வெற்றியின் ஊடாக இலங்கை வங்கியானது விரைவில் சகல வங்கி நடைமுறைகளையும் இயந்திரமயமாக்கி, எவ்விடத்திலும் எந்நேரத்திலும் கணக்கை ஆரம்பித்தல், கடன் உள்ளிட்ட சேவைகளுக்காக விண்ணப்பித்தல் போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கு வசதியை வழங்கும் வங்கியாக மாறும்.   

இலங்கை வங்கியானது 79 வருடங்களுக்கு மேலாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய நிதிப் பங்காளராக இருப்பதுடன், சொத்து மதிப்பு 2012 இல் ஒரு ட்ரில்லியன் ரூபாயையும் வைப்புத் தொகை 2015 இல் ஒரு ட்ரில்லியன் ரூபாயையும் முற்கொடுப்பனவு 2016 இல் ஒரு ட்ரில்லியன் ரூபாயையும் தாண்டி, இலங்கையில் இத்தகைய சாதனையை நிலைநாட்டிய முதல் வங்கியாக, அசாதாரணமான மைல்கற்களைக் கடந்தது. 

இன்று வங்கியின் சொத்து மதிப்பு 1.8 ட்ரில்லியனை விடவும் அதிகம் என்பதுடன், இலங்கையில் எந்தவொரு வணிக நிறுவனத்துக்கும் சொந்தமான ஆகக்கூடுதலான சொத்துத் தளம் இதுவாகும். 

ஐந்தொகையில், ‘மும்முறை ட்ரில்லியனைக்’ கொண்ட ஒரே வங்கி இலங்கை வங்கியாகும். தனது வாடிக்கையாளர்களின் மிகவும் பரந்துபட்ட வங்கித் தேவைகளை நிறைவேற்றுதற்குரிய வங்கியின் அணுகுமுறைகளானது, அதன் 79 வருடகால வெற்றியின் பின்னணியில் மறைந்துள்ள பிரதான காரணியாகும். ‘தேசத்தின் வங்கியாளர்’ என்ற காலத்தால் சோதிக்கப்பட்ட தொலைநோக்கத்துடன்  இலங்கை வங்கி  வர்த்தக நாமமானது தனது உண்மையான பங்குதாரர்களுக்கும் பிரஜைகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் சிறந்த பெறுபேறுகளைத் தந்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .