2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையின் வருமான வரி அதிகரிப்பு

S.Sekar   / 2021 மார்ச் 05 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்காக பதிவு செய்யப்பட்ட வருமான வரி கோவைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக திறைசேரி செயலாளர் எஸ். ஆர். ஆடிகல தெரிவித்தார்.

பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் மீட்சிபெற ஆரம்பித்துள்ளதை இது உணர்த்துவதாகவும், சில வருமான வரி செலுத்துவோர் புதிய கோவைகளை ஆரம்பித்துள்ளதாலும் இந்த அதிகரிப்பு பதிவாகியிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்காக, 2020 பெப்ரவரி மாதத்தில் திரட்டப்பட்ட கூட்டாண்மை மற்றும் தனிநபர் வருமான வரிகளின் பெறுமதி ரூ. 61 பில்லியனாக காணப்பட்டது.

ஆனாலும், 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்காக 2021 பெப்ரவரி மாதம் வரையில் செலுத்தப்பட்ட வருமான வரிகளின் பெறுமதி ரூ. 65 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்ததாக அவர் கூறினார்.

2019 இறுதிக் காலாண்டு என்பது கொரோனாவைரஸ் தொற்றுப் பரவலுக்கு முன்னதாக சாதாரண நிலைமை நிலவிய காலப்பகுதி என்பதுடன், 2020 இறுதிக் காலாண்டு என்பது, கொவிட்-19 இரண்டாம் அலைத் தாக்கம் காணப்பட்ட பகுதி எனவும் அவர் குறிப்பிட்டார்.

2020 பெப்வரி காலப்பகுதியில் சுமார் 3000 புதிய வரிக் கோவைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். வரி வீதங்களில் குறைப்பு ஏற்படுத்தப்பட்டதால் வரி செலுத்துவோர் உரிய காலத்தில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதாகவும், வரி விதிப்பு அதிகரிப்படுமாயின், அவர்கள் செலுத்தாமல் இருப்பதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .