2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையில் WAFL

Editorial   / 2019 நவம்பர் 22 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள். அதனால், ஒவ்வொரு விருந்தினர் மீதும் சிறப்பானதும் பரிபூரணத்துவமானதுமான கவனம் செலுத்துகின்றோம்” இவ்வாறு, தற்போது இலங்கையில் கால்பதித்துள்ள, துரித உணவுகள் வர்த்தகத்தில் சர்வதேசப் புகழ்பெற்ற வர்த்தக நாமமாகிய WAFL (வாஃபிள்) தெரிவிக்கின்றது.   

உணவு வகைகளில் அறுசுவைகளே உண்டென முன்னோர்கள் வகுத்திருக்கின்றார்கள். ஆனால், வாஃபிள் தயாரிப்புகள், அதற்கும் அப்பால், பலவித சுவைகளை ருசிக்கும் வாய்ப்புகளை அள்ளி வழங்குகின்றது.  

இனிப்புச் சுவையைச் சுவைத்திட, குக்கீகள், நட்டுகள், ஸ்பிரிங்கின், டொப்பிங்குகள், மென்மையான விப்கிறீம்களுடன் ஜஸ்கிறீம் போன்றவற்றையும் உறைப்பு சுவையைச் சுவைத்திட, வாஃபிள் கோன்டோக், வாஃபிள் சன்விச், வாஃபிள் பை போன்றவற்றைக் குறிப்பிடலாம். வாஃபிள் கோன்டோக் எனும்போது, மரக்கறி சொசேஜின் பலவித சுவைகளுடன் உறைப்புச் சுவையையும் உணர்ந்திடலாம்.   

சர்வதேச தரநிர்ணய நியமங்களையும் விதிகளையும் முழுமையாகப் பின்பற்றும் வாஃபிள் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வாழ்வதற்கேற்ற வகையிலேயே உணவு உற்பத்தியில் ஈடுபடுகின்றது. ரஷ்யா, இந்தியா, பெலாரஸ், கஸ்கிஸ்தான், நோபாளம், மொங்கோலியா, லெபனான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் 50க்கும் மேற்பட்ட வாஃபிள் விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன.   

இலங்கையில் வாஃபிள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு, மூவ்பிக் கொட்டலில் கடந்த வாரம் நடைபெற்றது. இதன்போது, வாஃபிள் சர்வதேச விற்பனைப் பிரிவின் தலைவர் டெனிஸ் எபிமோவிச், “இலங்கையர்களின் சுவைக்கேற்ற வகையில் வாஃபிள்ஐத் தயாரிப்பதற்கு நாங்கள் நிறைய ஆராய்ச்சிகள் செய்தோம். இதன் காரணமாக, இலங்கையர்களுக்கு உரிய, அவர்களுக்குப் பிடித்தமான, உணவுகளை வாஃபிள் வர்த்தக நாமத்தின் சிறப்புகளுடன் தருகின்றோம். எங்களது தேடல் எங்களுக்குப் பாரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது” என்றார்.   

இந்நிகழ்வில், இலங்கையில் வாஃபிளின் உரிமம் பெற்ற விற்பனையாளரான கோ ஈட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநர் தரிந்து திஸாநாயக்கவும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது, “2020 ஆம் ஆண்டு, காலப்பகுதியில் நாடுபூராவும் 13 வாஃபிள் கபேக்களை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக வருகின்றன” என்றார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .