2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை சமூகத்தை ஆதரிக்கும் செலான் வங்கி

Editorial   / 2020 மே 25 , பி.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

COVID -19 தொற்றுநோயின் தாக்கத்துடன் உலகம் போராடும் இந்த வேளையில், செலான் வங்கி அதன் ஊழியர்களுடனான ஒரு கூட்டு முயற்சியில் தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்த்துப் பல முன்முயற்சிகளுடன் இலங்கை சமூகத்தை ஆதரித்துள்ளது.

மே 4 ஆம் திகதி திங்கட்கிழமை, கோட்டையில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மேற்கு மாகாணம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக 5,500 முகக் கேடயங்களை, பொலிஸ் மா அதிபரிடம் வங்கி ஒப்படைத்தது. பதில் பொலிஸ் மா அதிபர் - C. D. விக்ரமரத்ன பணிப்பாளர், நகர வாகன பிரிவு, மேல் மாகாணம் - SP கமல் புஷ்பகுமார பணிப்பாளர்/தலைமை நிறைவேற்று அதிகாரி, செலான் வங்கி - கபில ஆரியரத்ன ஆகியோருடன் வங்கியின் மேல் அதிகாரிகளான, கிளைகளுக்கான பிரதி பொது முகாமையாளர் - சித்ரால் டி சில்வாளூ சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத் தலைமமை அதிகாரி - காமிக டி சில்வா மனிதவள பிரதி பொது முகாமையாளர்; - ஜயந்த அமரசிங்க மற்றும் மனிதவள தலைமை முகாமையாளர்; - அமந்தி மோதா, இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மே 5 ஆம் திகதி நடந்த சந்திப்பின் போது, வங்கி ஜனாதிபதியின் நிதிக்கு ரூ. 2.5 மில்லியன் வழங்கியதோடு கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்துக்கு ஆதரவளிக்க உறுதிகொண்டது.

2020 மே 06 ஆம் தேதி வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் திரு. உபுல் ரோஹனவை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் அதிகாரிகளுக்கு 3,000 முக கேடயங்களையும் செலான் வங்கி வழங்கியது. COVID -19 ஐ எதிர்த்து நாடு முழுவதும் பணிபுரியும் பொது சுகாதார ஆய்வாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த முக கேடயங்கள் பயன்படுத்தப்படும். இந்த நெருக்கடியான காலத்தில் உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதற்கான ஆர்வத்தில், 100% உள்ளூர் உற்பத்தியாளரிடமிருந்து அனைத்து முகக் கேடயங்களையும் கொள்முதல் செய்ய செலான் வங்கி நடவடிக்கை எடுத்தது.

இந்த முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த செலான் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கபில ஆரியரத்ன,

“இலங்கையில் COVID -19 பரவுவதை எதிர்த்து ஒவ்வொரு நாளும் அயராது உழைக்கும் முன்னணி அதிகாரிகளுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் அவர்களை நாங்கள் மனதார  பாராட்டுகிறோம். இந்த நன்கொடைகள் மூலம் இந்த சவாலான காலங்களில் தேசத்திற்கு எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிசெய்ய இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்துகிறோம். ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக அளிப்பதற்கு ஆர்வமாக உறுதியளித்த எங்கள் ஊழியர்களின் தாராள ஆதரவு இல்லாமல் இந்த நன்கொடைகள் சாத்தியமில்லை. மேலும், இதற்கு சமமான தொகையை வழங்குவதற்கு வங்கியும் பொருந்தியதன் மூலம் தேசத்திற்கு தேவையான நேரத்தில் உதவுவதற்கு கணிசமான நிதி திரட்டப்பட்டது. நாட்டுக்கு அத்தியாவசிய வங்கி சேவைகளை வழங்குவதற்கும், இந்த தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதார சவால்களை சமாளிப்பதை உறுதி செய்வதற்கு எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருடனும் இணைந்து செயல்படுவதற்கும் வங்கியும் அதன் ஊழியர்களும் முழுமையாக உறுதியுடன் உள்ளனர்” என்று கூறினார்.

முகக் கேடயங்களின் ஆரம்ப நன்கொடை சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அவர்களின் முயற்சிகளுக்கு சிறந்த ஆதரவைத் தர வங்கி திட்டமிட்டுள்ள பல முயற்சிகளில் முதலாவதாகும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமும், அதன் பரந்த கிளை வலையமைப்பு மூலம் மேற்கொள்ளப்படும் பிற முயற்சிகளின் மூலமாகவும், மொத்தம் 9,000 முகக் கேடயங்களை நாடுமுழுவதும் சேவைபுரியும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் மத்தியில் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதியின் நிதிக்கான வங்கியின் பங்களிப்பு உட்பட சேகரிக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 20 மில்லியன் ஆகும். COVID -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு முக்கிய சேவை வழங்குநரான கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவை விரிவுபடுத்துவதற்காக முழுமையான வசதிகள் அமைந்த மேலதிக வார்டை நிர்மாணிப்பதற்கு இந்த நிதியின் மூலம் திரட்டப்பட்ட மீதி தொகை முதலீடு செய்யப்படும்.

அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற வகையில், வங்கி சேவைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சேவையை வழங்குவதில் செலான் வங்கி முழுமையாக உறுதியுடன் உள்ளது. ஊழுஏஐனு -19 தொற்றுநோய்க்கு எதிரான தேசத்தின் போராட்டத்தை ஆதரிப்பதன் மூலம் இந்த தேசத்தின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பணியாற்றும் அதே நேரம் எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களின் பொருளாதார நலனையும் உறுதிப்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X