2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை வங்கிக்கு ‘Best HR Organization to work’ சர்வதேச விருது அங்கிகாரம்

Editorial   / 2018 மார்ச் 27 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பாய் நகர், ‘தாஜ்லாண்டஸ் என்ட்’ இல் 2018 பெப்ரவரியில் நடைபெற்ற Global HR Excellence Awards 2018இல், உலக மனித வள அபிவிருத்தி காங்கிரஸ், இலங்கை வங்கியை ‘Best HR Organization to work’ என அங்கிகரித்தது.   

ஆற்றலையும் மனித வள பழக்க வழக்கங்களையும் கவனத்தில் கொண்டு, தொழில்வாண்மைசார் நோக்கத்துக்காக, ஒழுங்கு செய்துள்ள மனித வளங்களைப் பயன்படுத்திக் கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.   

தனது வெற்றிக்குக் காரணம், மனித வளம் என்பதை இலங்கைவங்கி நம்புகின்றது. நிறுவன வளர்ச்சியை அளந்து, தனது நோக்கை அடைவதற்கு உதவுகின்ற பெறுமதிகளை மனதில் புகுத்தி, ஒரு சமூக சேவையாளனாகுவதன் மூலம், நிறுவனத்தில், எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதில் பங்களிப்பையும் புதிய கலாசாரமொன்றைச் செயற்படுத்துதலையும் மேற்கொள்கின்றது.   

8,000க்கு மேற்பட்ட ஊழியர் படையைத் திறமையுடன் நிர்வகித்து, வங்கியின் மூலோபாய இலக்குகளை அடைந்து, நாட்டுக்குள் முதற் தர வர்த்தகச் சின்னத்தையும் முதற்தர வங்கி என்னும் நிலையையும் பேணுவதை இவ்விருது அங்கிகரித்துள்ளது.   

மனித வளப்பிரிவு பிரதிப்பொது முகாமையாளர் கே.ஈ.டீ.சுமனசிறி, குறிப்பிடுகையில், “தனது ஊழியர் குழாம், தம்மிடம் காணப்படும் மிகப்பெரிய சக்திகளில் ஒன்று என வங்கி கருதுகின்றது. ஆளணியின் சிறந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்குச் சகல முயற்சிகளையும் நிறுவனம் மேற்கொள்கின்றது. புதிதாக சேர்த்துக்கொள்பவர்களுக்கு, எமது கலாசாரத்தையும் தொழிலின் ஒழுக்க விழுமியங்களையும் எளிதாகக் கடைப்பிடிக்கச் செய்யப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன” எனக் கூறினார்.   

2017ஆம் ஆண்டில், உலக மனித வள அபிவிருத்தி காங்கிரஸ் ஒழுங்கு செய்த, வங்கியியல் மற்றும் நிதியியல் தொழிலின் (BFSI) சிறப்பும் தலைமைத்துவமும் விருது 2017 விழாவில் தலைமைத்துவமும் நோக்கும் உள்ளுணர்வு மற்றும் ஈடுபாடு, அர்ப்பணிப்பு மற்றும் விநியோகம் எதிர்காலத்துக்கு திசைநோக்குதல் நேர்மை மற்றும் ஒழுக்கம், நிலைபேறான தன்மைக்கு ஆற்றல் ஆகியவற்றைப் பிரமாணங்களாகக் கொண்டு, இலங்கை வங்கி Best Employer 2017 மற்றும் Best Bank in the Public Sector ஆகிய விருதுகளில் பாராட்டப்பட்டது.   

ஒவ்வொரு ஊழியரிடமும் காணப்படும் குறைபாடுகளை இனங்கண்டு, விருத்தி செய்யத் தேவையான பயிற்சி மற்றும் அபிவிருத்தி செய்யும் கொள்கையை வங்கி வைத்துள்ளதுடன் பயிற்சிகளும் வழங்கப்படும். 

அதன் முக்கிய நோக்கமாவது, வியாபார வாய்ப்புகளை இனங்கண்டு அவற்றை அடிப்படையாகக் கொண்டு பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சிகளை நடாத்துவதாகும். இவற்றின் தரம் வாய்ந்த தன்மையையும் பயனுடைமையையும் உறுதிப்படுத்தும் முகமாக, வங்கி கவர்ச்சிகரமானதொரு வருடாந்த பயிற்சியளித்தல் பாதீட்டை ஒதுக்கியுள்ளது.

ஊழியர்களது தொழிலுக்குரிய அறிவை விஸ்தரித்தல் மற்றும் இற்றைப்படுத்தல் நோக்கத்துடன் பயிற்சியளித்தலிலும் இற்றைப்படுத்தலிலும் முதலீடு செய்யப்படுவதுடன், இதன் மூலம் ஊழியர்கள் தங்களது அறிவை விருத்திசெய்து தொழில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, வாடிக்கையாளர்களுக்கு செயற்திறன்மிக்க சேவையை வழங்குவது வங்கியின் எதிர்பார்ப்பாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .