2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை வங்கியின் ஆராதனா நிகழ்வு முன்னெடுப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கியின் ஆராதனா பாரம்பரிய இசைக் கச்சேரி நிகழ்வு தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதில் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான செனரத் பண்டார பங்கேற்றார்.

நேரடி இசைக் கச்சேரி நிகழ்வில் பேராசிரியர் சனத் நந்தசிறி, மல்காந்தி நந்தசிறி, கீர்த்தி பஸ்குவல், நிரோஷா விராஜினி, கசுன் கல்ஹார போன்ற இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.   

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் இந்நிகழ்வு அஞ்சல் செய்யப்பட்டிருந்தது. உள்நாட்டு பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்நிகழ்வு, இலங்கை வங்கியின் மேற்பார்வையில் இடம்பெற்றதுடன், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தால் தயாரிக்கப்ட்டது.

தற்போது இந்நிகழ்வு தொலைக்காட்சி நிகழ்வாகவும் மெருகேற்றப்பட்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .