2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை வங்கியின் இரண்டாவது ‘BOC Digi’

Editorial   / 2019 ஜனவரி 09 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கி தனது இரண்டாவது சுய சேவை அலகான BOC Digiஐ கொழும்பிலுள்ள உலக வர்த்தக மய்யத் தொகுதியில் திறந்துள்ளது.

இதில் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான செனரத் பண்டார, தயாரிப்புகள்,  வங்கியியல் அபிவிருத்திப் பிரிவின் பதில் பொது முகாமையாளர் எம்.ஜே.பி சல்காடோ, விற்பனை, நாளிகை முகாமைத்துவ பதில் பொது முகாமையாளர் சி. ஆமரசிங்க, கூட்டாண்மை மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ அங்கத்தவர்கள், இதர வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கண்டி சிற்றி சென்ரரில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட முதலாவது “BOC Digi” அலகைத் தொடர்ந்து இரண்டாவது நிறுவப்பட்டுள்ள சுய சேவைகளை வழங்கும் அலகாக இது அமைந்துள்ளது. டிஜிட்டல் வங்கியியல் துறையில் புதிய அனுபவத்தை வழங்குவதுடன், 24 x 7 மணி நேர வங்கியியல் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் “BOC Digi” புத்தாக்கத்தை வழங்குகிறது.   

வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான செனரத் பண்டார கருத்துத் தெரிவிக்கையில், “கண்டி சிற்றி சென்ரரில் ‘BOC Digi’ தனது முதலாவது அலகைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, உலக வர்த்தக மய்யத்தில் தற்போது இரண்டாவது அலகு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
தற்கால வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன், ‘BOC Digi’ கொள்கை பெருமளவு அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. நாட்டின் பல முக்கியமான பகுதிகளில் பல இடங்களில் இந்த அலகை எதிர்காலத்தில் நிறுவ நாம் எண்ணியுள்ளோம். இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு தமது அத்தியாவசியமான வங்கியியல் கொடுக்கல், வாங்கல்களை வருடத்தின் எந்நேரத்திலும் இலகுவான முறையில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .