2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கையின் பங்குச்சந்தை: திடநம்பிக்கையுடனான எதிர்பார்ப்பு

Editorial   / 2020 ஜூன் 19 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு பங்குப்பரிவர்த்தனை செயற்பாடுகள், மே மாதம் 11ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் தலைவர் திரு. ரே அபேவர்தன இந்த நேர்காணலில், கொவிட்-19 தாக்கத்தின் பின்னரான கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் முயற்சிகள், எதிர்கால செயற்பாடுகள், சந்தை நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

கே: மக்களின் வாழ்க்கை நிலமையை வழமைக்கு கொண்டு வரவும், பொருளாதாரத்துக்கு உயிரூட்டவும் அரசாங்கம் எடுத்துள்ள ஒரு கட்டமாக மே மாதம் 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்ட வியாபார செயற்பாடுகளை அடுத்து சந்தை நடவடிக்கைகள் எவ்வாறு செயற்பட்டன?

வியாபார நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்ப்படுவதற்கு முன்னராக, பங்குகளின் கவர்ச்சிகரமான பெறுமதிகள் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் கொள்வனவு ஆர்வம் காணப்படும் என்பதில் நாம் நம்பிக்கைக் கொண்டிருந்தோம். எனினும் மே மாதம் 11 ஆம் திகதி வியாபாரம் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சந்தையில் காணப்பட்ட அதிக விற்பனை அழுத்தங்கள் காரணமாக சந்தையில் ஒரு வீழ்ச்சி நிலை காணப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்கள் ஒரு நீண்டகால முதலீட்டினை உணர்ந்திருந்தமையினால் நிலையான, இயல்பான சந்தை நிலமையினை அவதானிக்கக் கூடியதாகயிருந்தது. மேலும் 2009 ஆம் ஆண்டு யுத்தக்காலத்தில் சில பங்கு விலைமட்டங்கள் காணப்பட்டதைப் போன்று ஒரு நிலமையினையும் அவதானிக்கக் கூடியதாகயிருந்தது. எனினும் ஆரம்பத்திலிருந்தே நாம் சந்தை முறிவு ஏற்படாது என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தோம்.

வியாபார நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொள்வனவு வாய்ப்புக்களின் ஊடாக முழுமையான நன்மைகளை பயன்படுத்திக்கொள்ள முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டிருப்பதுடன் சந்தையின் நீண்டகால நன்மைகளை எதிர்ப்பார்த்துள்ள முதலீட்டாளர்களை; கொண்டிருப்பது தொடர்பாக நாம் பெருமையடைகின்றோம். நீண்டகால முதலீடுகளினூடாக சிறந்த நன்மைகளை அடையக்கூடியவாறு பங்குகளை கொள்வனவு செய்து குறிப்பிடத்தக்க காலத்திற்கு அவற்றை வைத்திருக்கக்கூடிய முதலீட்டாளர்களுக்கு சந்தை தொடர்ச்சியாக வாய்ப்புக்களை வழங்குகின்றது.

சந்தை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிராந்திய சந்தைகளைப் போன்று, வெளிநாட்டு தேறிய வெளிப்பாய்ச்சலை அவதானிக்கக் கூடியதாகயிருந்தது. எனினும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை மட்டுமே செய்கின்றார்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இது தவறானதாகும். வியாபார நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களால் ரூபா. 3.1 பில்லியன் பெறுமதியான கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கவர்ச்சிகரமான பெறுமதியினை கொண்டுள்ளதானது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவதை எமக்கு உணர்த்துகின்றது. அத்தோடு வெளிநாடுகளில் வசிக்கும் அல்லது வேலை செய்யும் இலங்கையர்கள் மத்தியிலும் இந்த ஈடுபாட்டை காணக்கூடியதாகவுள்ளது.

உள்நாட்டில் தனிப்பட்டவர்கள் புதிய கணக்குகளை திறப்பதில் ஆர்வம் காட்டுவதை எம்மால் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மே மாதம் 11 திகதி முதல் 800 புதிய ஊனுளு கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இது இந்த வருடத்தில் திறக்கப்பட்ட கணக்குகளில் 19% ஆகும்.

S&P SL20 விலைச்சுட்டியானது மே 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வாரத்தில் ஒரு நாளுக்கான உயர் வளர்ச்சி வீதத்தினை வெளிக்காட்டியது. அதே வாரத்தில் ASPI 8.12மூ வளர்ச்சியினையும் S&P SL20 15.88% வளர்ச்சியினையும் பதிவு செய்திருந்தது. வியாபாரம் மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளாந்த சராசரி புரள்வும் ரூபாய் 1.62 பில்லியன்களாக பதிவு செய்யப்பட்டிருந்தது. சந்தை மூலதனவாக்கமும் ரூபாய் 120.6 பில்லியன்களால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

மேலும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் சந்தைப் பங்களிப்பு அதிகரித்ததன் காரணமாக மொத்தப் புரள்வில் இப்பிரிவினரின் பங்களிப்பு 13 நாட்களில் 68% ஐ தாண்டியுள்ளதுடன் வருடத்திற்கான பங்களிப்பு 45% ஆகும். உள்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியிலான புதுப்பிக்கப்பட்ட ஆர்வமானது பாரிய சாதக நிலமையாக அமையும் எனவும் நான் எதிர்ப்பார்க்கின்றேன்.

கே: ள்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தையை பிரபல்யப்படுத்தவும் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈடுபடுத்தவும் கொ.ப.ப எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது?

சந்தை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு மக்கள் மத்தியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தல் தொடர்பாக கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதனைக் காணக்கூடியதாகவுள்ளது. இந்த ஆர்வமானது எமது சந்தையில் எதிர்கால முதலீட்டு வாய்ப்புக்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

எங்களது முயற்சிகளின் பாரியளவு பகுதியானது, எமது சந்தையினை உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் குறிப்பாக நிகழ்வுகள் மற்றும் நேரடி சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் ஊடாக பிரபல்யப்படுத்தலாகும். தற்போதைய சூழ்நிலையில் இந்தப் பொறிமுறைக்கு அது சவாலான ஒன்றாக இருந்தபோதிலும் பங்குச்சந்தை தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக நாம் ஏற்கனவே இணைய வழி அமர்வுகள் மற்றும் இலத்திரணியல் நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளதோடு நிகழ்ச்சிகளுக்கான சிறந்த பிரதிபளிப்பினையும் பெற்றுள்ளோம். அத்தோடு இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவோடு இணைந்து பங்குச்சந்தை தொடர்பாக பாரியளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றினை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். இதனை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு சந்தையின் பரந்தளவான பங்குதாரர்களின் உதவி தேவைப்படுகின்றது.

சந்தை​யைப் பிரபல்யப்படுத்துவதிலும், புதிய முதலீட்டாளர்களை வழிப்படுத்துவதிலும் பங்குத்தரகர் சமூகம் முக்கிய வகிபாகமொன்றினைக் கொண்டுள்ளது என்பதனை நான் உறுதியாக நம்புகின்றேன். எமது துறையில் பங்குத்தரகர் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களோடு நேரடித் தொடர்புடையவர்களாக காணப்படுவதோடு பொது மக்கள் மற்றும் பாதுகாப்பான முதலீடுகள் மத்தியில் சந்தையில் பாரிய ஒரு வகிபாகத்தினைக் கொண்டுள்ளனர். எனவே, சந்தையில் காணப்படும் ஆர்வத்தையும், கவர்ச்சிகரமான மதிப்பீடுகளையும், பங்குச்சந்தை முதலீட்டை ஊக்குவிக்கும் முகமாகவும் மற்றும் முடிந்தவரை வாய்ப்புக்களை முழுமையாக பயன்படுத்தவும் பங்குத்தரகர்களை நான் கேட்டுக் கொள்ளுகின்றேன். எமது சந்தையினை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு கொ.ப.ப மற்றும் இ.பி.ப.ஆ என்பன தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளன என்பதை நான் உறுதியாக கூறுகின்றேன்.

இலங்கையின் உரித்துடமை சந்தையை வெளிநாட்டு சந்தைகளில் மேம்படுத்தும் முகமாக வெளிநாட்டு நிறுவன ரீதியான முதலீட்டாளர்களுடன் இணையவழி கருத்தரங்குகளை மேற்கொள்வதற்கான திட்டங்களையும் நாம் வகுத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னராக சமூகப் பொருளாதார கொள்கைள், ஒரு உறுதியான, நிலையான அரசாங்கம் அமையும்போது இந்த மேம்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென நாம் நம்புகின்றோம்.

கே: கொவிட்-19 இற்கு பின்னரான காலப்பகுதியில் வியாபாரங்களின் நிதியிடலானது, முதன்மையான ஒன்றாக அமையக்கூடும். இது தொடர்பாக கொ.ப.ப எவ்வாறு உதவ முடியும்?

வியாபார நிறுவனங்கள் அவசியமான நிதியை உரித்துடமை அடிப்படையிலான மூலதனத்தை திரட்டிக் கொள்வதற்கான வழிமுறையொன்றினை கொ.ப.ப வழங்குவதனூடாக உதவி செய்ய முடியும்.

தற்போதைய சூழ்நிலையில் நிதித் திரட்டலானது வியாபாரங்கள், கைத்தொழில் துறைகளில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இலங்கையின் வியாபாரங்கள் கடன் அடிப்படையிலான நிதியிடலை பாரம்பரிய முறையாகக் கொண்டுள்ளது, எனினும தற்போதைய சூழ்நிலையில் வியாபாரங்களுக்கு இது கடினமான ஒன்றாக அமையுமென நினைக்கின்றேன். அநேகமான வியாபாரங்கள் கடன் சுமையினைக் குறைக்கக் கூடிய வகையில் நிதித் திரட்டக் கூடிய வேறு மார்க்கங்களை தேடுகின்றன. அந்த வகையில் பரந்தளவான முதலீட்டாளர்களை அடிப்படையாகக் கொண்ட உரித்துடமை அடிப்படையிலான மூலதனத்தை திரட்டிக் கொள்வதற்கான வாய்ப்பு எமது சந்தையில் கானப்படுகின்றது. அதேநேரம் அரசாங்கத்தின் நிதித்திரட்டல் தேவைப்பாடுகளுக்கு உதவுவதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளையும் கொ.ப.ப கொண்டுள்ளது.

பிரதான திரை, திரிசவி திரை மற்றும் வலுவூட்டல் திரை ஆகியவற்றினூடாக பாரியளவான கம்பனிகள் தொடக்கம் சிறிய மற்றும் நடுத்தர அளவான கம்பனிகள் வரை தமக்கு அவசியமான உரித்துடமை அடிப்படையிலான நிதியினைத் திரட்டிக் கொள்வதற்கு வேறுபட்ட பட்டியற் தளங்களை கொ.ப.ப வழங்குகின்றது. கம்பனிகளுக்கு பரந்தளவான பட்டியற்படுத்தல் வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் இ.பி.ப.ஆ இன் ஆலோசனையுடன் பட்டியற்படுத்தல் விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் தொடர்பாக வேலைத்திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

கே: 2020 ஆம் வருடத்தின் எஞ்சிய காலப்பகுதியில் சந்தை தொடரடபான உங்களுடைய எதிர்பார்ப்பு எவ்வாறு உள்ளது?

இந்த நேரத்தில் இலங்கையர்களாக நாம் ஒட்டு மொத்தமாக நேர் மறையான விளைவுகள் தொடர்பான போக்கினைக் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு நாங்கள் இருக்கும் பட்சத்தில் விரைவாக நாம் வழமைக்கு திரும்ப முடியும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கொள்கை வழிப்படுத்தலில் ஓர் நிலையான தன்மை, கொவிட்-19 தாக்கத்தில் வீழ்ச்சிநிலை அமையும்போது சந்தை நிலைமைகள் குறிப்பிடத்தக்க அளவு வழமைக்கு திரும்பக் கூடியதாக இருக்கும். வியாபார நிறுவனங்களின் எதிர் மறையான தாக்கங்களிலிருந்து திரும்ப முடியும் எனவும் நாம் நினைக்கின்றோம்.

தற்போது பங்குச்சந்தை கவர்ச்சிகரமான வாய்புக்களை வழங்கி வருவதோடு முதலீட்டாளர்கள் அவற்றை அவதானிப்பதையும் நாம் காண்கின்றோம். இலங்கையில் விரைவான ஒரு பொருளாதார மீளெழுச்சி நோக்கிய செய்முறைகளில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

இணைந்து சேவையாற்றுவதற்கு இதுதான் சரியான தருணம் மேலும் சவால்களை எதிர்கொள்வதற்கு நாம் உறுதியாக இருக்கின்றோம் அத்தோடு 2021 ஆண்டு முழுமையாக வழமைக்கு திரும்ப முடியும் என நாம் நம்புகின்றோம்.

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை பற்றி 

இலங்கையிலுள்ள ஒரேயொரு பங்குச் சந்தையை கொழும்பு பங்குப்பரிவர்த்தனை  இயக்குவதுடன் கம்பனிகளும் முதலீட்டாளர்களும் ஒன்றிணையக்கூடிய ஓர் வெளிப்படையான மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட சூழலை வழங்குவதற்கும் பொறுப்பாயுள்ளது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையானது இலங்கையின் சட்டங்களுக்கமைய ஸ்தாபிக்கப்பட்ட உத்தரவாதத்தினால் பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஓர் கம்பனியாகும். இந்நிறுவனம் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமமளிக்கப்பட்டுள்ளதுடன் இது 14 அங்கத்தவர்களையும் 14 வியாபார அங்கத்தகவர்களையும் உள்ளடக்கிய ஓர் பரஸ்பரமுள்ள பரிமாற்றகமாகும். அனைத்து அங்கத்தவர்கள் மற்றும் வியாபார அங்கத்தவர்கள் பங்குத்தரகர்களாகச் செயற்படுவதற்கு இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமமளிக்கப்பட்டுள்ளார்கள். மேலதிகத் தகவல்களுக்கு றறற.உளந.டம பை; பார்க்கவும்.

மேலதிகத் தகவல்களுக்கு:

நிரோஷன் விஜேசுந்தர

தலைவர்

சந்தை அபிவிருத்திப் பிரிவு

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை

தளம் 04, மேற்கு கோபுரம்

உலக வர்த்தக மையம்

எச்லன் சதுக்கம்

கொழும்பு 01

இலங்கை.

தொலைபேசி                                    :  011 2356510

அலைபேசி                                        : 0777 819999

தொலைநகல்                                    : 011 2445279


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .