2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கையில் சியெட் 25 ஆண்டுகள் பூர்த்தி

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டரை தசாப்தங்களை இலங்கையில் பூர்த்தி செய்துள்ள டயர் வர்த்தக முத்திரையான சியெட் நாட்டின் சாரதிகளுக்கு ஒரு நல்ல செய்தியை வீதிகளுக்கு வந்து வழங்கவுள்ளது.   

‘நல்ல சாரதிகள் உயிர்களைக் காப்பாற்றுவார்கள்’ என்பது சியெட் வழங்கவுள்ள அந்த தகவலாகும். இந்த நாட்டில் ஒவ்வொரு வருடமும் சுமார் மூவாயிரம் உயிர்கள் வீதி விபத்துக்களில் பலியாவதாகத் தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன. இதனைக் கருத்திற் கொண்டே சாரதிகளினதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்தப் பிரசார தொனிப் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சியெட் வர்த்தக முத்திரையின் 25 வருட நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாசகங்களைக் கொண்ட சுமார் 20 ஆயிரம் ஸ்டிக்கர்கள் வாகன சாரதிகள் மற்றும் ஓட்டுனர்கள் மத்தியில் விநியோகிக்கப்படவுள்ளன.

அர்த்தமுள்ள வாகனம் ஓட்டல் என்பது போக்குவரத்து தண்டப் பணங்களைச் செலுத்தாமல் தப்பிக் கொள்வது மட்டும் அல்ல. உயிர்களைக் காப்பதுதான் அதன் முக்கிய அங்கம் என்ற தகவலை வீட்டுக்கு வீடு இந்தப் பிரசாரம் கொண்டு செல்லும் என்று நம்பப்படுகின்றது.  

“நாம் தயாரிக்கும் ஒவ்வொரு உற்பத்தியிலும் பாதுகாப்பு தான் மிக முக்கிய விடயமாக அமைந்துள்ளது” என்று சியெட் களனி ஹோல்டிங்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரவி தத்லானி கூறினார். இலங்கையின் வாயு மூலமான டயர் தேவையில் அரைவாசிக்கும் அதிகமானவற்றை சியெட் நிறுவனமே உற்பத்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .