2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையில் நடைபெறவுள்ள ஆரோக்கிய பணியிட மாநாடு

Editorial   / 2019 பெப்ரவரி 24 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள பெருநிறுவன ஊழியர்களில் 91.5 சதவீதமானவர்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில்லை என்பதுடன், 60சதவீதமானோர் பணி அழுத்தக் காரணிகளால் பாதிக்கப்படுவதுடன், 12.9சதவீதமானவர்கள் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்படுகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? 

இதனால், நிறுவனங்கள் வருடமொன்றில், 53.2 நாள்களுக்கான உற்பத்தித்திறனை இழக்கின்றன. அதாவது, இதன் பெறுமதி ரூ. 2.6 மில்லியனுக்கும் அதிகமாகும். 

நாட்டில் ஆரோக்கியப் பணியிட நிலைமையைப் புரிந்து கொள்வதற்கு, இலங்கையிலுள்ள பெருநிறுவன ஊழியர்களில், 91.5சதவீதமானவர்கள், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில்லை என்பதுடன், 60சதவீதமானோர் பணி அழுத்தக் காரணிகளால் பாதிக்கப்படுவதுடன், 12.9சதவீதமானவர்கள் மனஅழுத்தத்தாலும் பாதிக்கப்படுகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? 

இதனால் நிறுவனங்கள், வருடமொன்றில் 53.2 நாள்களுக்கான உற்பத்தித்திறனை இழக்கின்றன. அதாவது, இதன் பெறுமதி ரூபாய் 2.6 மில்லியனுக்கும் அதிகமாகும். 

நாட்டில் ஆரோக்கியப் பணியிட நிலைமையைப் புரிந்து கொள்வதற்கு, AIA இன்ஷுரன்ஸ் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததும் இலங்கையில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆரோக்கியப் பணியிடக் கணக்காய்வின் சில முடிவுகளே இவையாகும். 

ஆரோக்கியம், உற்பத்தித்திறனில் தாக்கம் செலுத்தும் தொடர்பை விளங்கிக் கொள்வதற்கு, ஊழியர்களின் வாழ்க்கை முறை, மருத்துவக் குறிகாட்டிகள், மனஅழுத்தம், உளஆரோக்கியம் ஆகியவற்றைப் பரிசோதிப்பதற்கான விஞ்ஞான முறையில் அமைந்த முதலாவது பணியிட ஆய்வே இதுவாகும். இந்த ஆய்வானது, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான ‘ராண்ட் யூரோப்’ (RAND Europe) இனாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

AIAஇன் பிரதான நிறைவேற்று அதிகாரி, பங்கச் பெனர்ஜி கருத்துத் தெரிவிக்கையில், “எங்களுக்குத் தரப்பட்டுள்ள நேரத்தில், அதிகமான நேரத்தை நாங்கள் பணியிலேயே செலவு செய்கின்றோம். ஆரோக்கியமான பணியிடத்தை விளங்கிக் கொள்ளல், அதனை அளவிடல் போன்றவற்றுடன், இறுதியாக அதை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும் எனக் கருதுகின்றோம். இதனாலேயே, AIA தனது ஊழியர்களுக்கு, அவர்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான இலக்குகள், முழு நிறுவனத்தினதும் உற்பத்தித்திறனை மேம்படுத்தல் ஆகியவற்றுக்கு உதவும் முகமாக, மிகவும் பயனுள்ள மூலோபாயங்களை வழங்குவதுடன், ஊழியர்களின் சுகாதார,  ஆரோக்கியத்தில் முழுமையான புரிதலை, தொழில் வழங்குநர்களுக்குத் தெரியச் செய்வதை நோக்காகக் கொண்டமைந்த, மிகவும் ஆரோக்கியமான பணியிடச் சூழல் ஆய்வை, இலங்கையில் முன்னெடுத்திருந்தது” எனத் தெரிவித்தார். 

AIA நிறுவனத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி, நிகில் அத்வானி கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள் இந்த ஆய்வுக்கு 53 நிறுவனங்களை உட்படுத்தியிருந்தோம். மேலும், பங்குபற்றிய ஒவ்வொரு நிறுவனமும் அவர்களுடைய ஊழியர்களுக்கு, ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவது தொடர்பாக, வினைதிறனான மூலோபாயங்களை அடையாளப்படுத்திய போது, ஊழியர்களின் சுகாதாரம், ஆரோக்கிய விவரங்களில் ஆழமான புரிதலைப் பெற்றிருந்தன. எவ்வாறாயினும், நிறுவனங்கள் இவ்வாறு மேற்கொள்ளும் போது, அதாவது உற்பத்தித்திறனை அதிகரித்தல், வரவின்மையைக் குறைத்தல், மிகச்சிறந்த ஊழியர்களைப் பணியமர்த்தல் போன்றவை மூலமாக, தங்களது நிறுவனத்தின் வணிகச் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்பதை, இங்கு கூற வேண்டியதில்லை” எனத் தெரிவித்தார்.  

ஆய்வின் முடிவுகளானவை, 2019 பெப்ரவரி 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரோக்கியப் பணியிட மாநாட்டில் அறிவிக்கப்படும். ‘AIA வைட்டலிடி’ (AIA Vitality) இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடானது, தனது ஊழியர்களுக்கு ஆரோக்கியமான பணிச்சூழல் வழங்குவதை ஊக்குவிக்கவும் அதை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களது உரிய முயற்சியைக் கௌரவித்தும் விருது வழங்குவதற்காக, இலங்கையில் நடைபெறவுள்ள இந்த வகையிலான முதலாவது நிகழ்வாகவே இது அமையும். 

விருதுகளானவை முறையே பெரிய, நடுத்தர, சிறிய ‘ஆரோக்கியமான பணியிடம்’, ‘ஆரோக்கியமான தொழில் வழங்குநர்’, ‘ஆரோக்கியமான ஊழியர்’ ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி இருக்கும்.

ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மன அழுத்தம், நித்திரை, மதுப்பாவனை, புகைத்தல் போன்ற பிரதான பணியிட ஆரோக்கியக் கவலைகள் தொடர்பாக, உள்நாட்டு, சர்வதேச நிபுணர்களால் முன்னெடுக்கப்படும் சிறந்த பயிற்சி நடைமுறைகள், உத்திகள், தெளிவானதும் உள்ளார்ந்தமான அமர்வுகள் போன்றவற்றில் பகிரப்படும் தகவலுக்கு, மேலதிகமாக இந்த மாநாடானது மிகவும் ஆரோக்கியமான பணியிட ஆய்வின் பிரதானமான முடிவுகளையே வெளிப்படுத்தும்.  

இந்த ஆழ்ந்த உள்ளார்ந்தமான மாநாட்டில், அழைப்பின் பேரில் மட்டுமே பங்குபற்ற முடியும். ஆகவே நீங்கள் பெருநிறுவன சுகாதாரம், ஆரோக்கியம் தொடர்பாக, இந்த வகையிலான முதலாவது நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பினால்,  011 2310121இனூடாக வெனூரிக்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள், அல்லது  lk.healthiestworkplace@aia.com இற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்புங்கள். காணப்படும் ஆசனங்களைப் பொறுத்தே அனுமதி வழங்கப்படும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .