2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையில் நன் மதிப்பைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக ‘99X டெக்னொலஜி’ தெரிவு

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

  99X டெக்னொலஜி, 2019 ஆம் ஆண்டுக்கான LMDஇன் நன் மதிப்பைப் பெற்ற 100 நிறுவனங்களில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது. நீல்சன் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த LMD கருத்தாய்வில் இந்தக் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.   

15ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் பிரத்தியேக கருத்தாய்வில் 32 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த 99X டெக்னொலஜி, தரப்படுத்தப்பட்டிருந்த 9 தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையில் முதலாமிடத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தது. LMDஇன் வருடாந்த நன்மதிப்பை பெற்ற நிறுவனங்கள் வரிசையில், நாட்டின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், வீட்டுப் பாவனை, வர்த்தக நாமங்கள், பல்தேசிய நிறுவனங்கள் போன்றன அடங்கியிருந்தன.   

99X டெக்னொலஜி இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம் கருத்துத் தெரிவிக்கையில், “99X டெக்னொலஜி” தொடர்பில் பொது மக்கள் கொண்டுள்ள அபிப்பிராயம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எமது செயற்பாடுகளினூடாக எமது பங்காளர்களுக்கு பெறுமதியை ஏற்படுத்த நாம் முயற்சி செய்கின்றோம். இலங்கையில் காணப்படும் முன்னணி கூட்டாண்மை நாமங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், LMD/ நீல்சன் கருத்தாய்வில் நன்மதிப்பைப் பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாக தரப்படுத்தப்ப ட்டுள்ளமையானது, எமது பங்காளர்களுக்கு நாம் வழங்கும் பெறுமதி சேர் செயற்பாடுகளுக்கு கிடைத்த நன்மதிப்பாக அமைந்துள்ளது.’ என்றார்.   

800 க்கும் அதிகமான பதிலளிப்போரின் கருத்துகளைக் கொண்டு இலங்கையின் மிகவும் நன்மதிப்பை பெற்ற நிறுவனங்கள் குறித்த கருத்தாய்வு முன்னெடுக்கப்படுகின்றது. தொலைபேசி நேர்காணல்கள் ஊடாக இந்த கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நிதிப் பெறுபேறுகள், தர கட்டுப்பாடுகள், முகாமைத்துவ கோவை, நேர்மை, புத்தாக்கம், ஈடுபாடு, கூட்டாண்மை கலாசாரம், சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள், நோக்கம் மற்றும் தேசத்துக்கு முக்கியத்துவம் போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு இந்த நிறுவனங்கள் தரப்படுத்தப்பட்டிருந்தன. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் 800 பதிலளிப்போரின் (முகாமையாளர்கள் மற்றும் உயர்ந்த பதவியிலுள்ளவர்கள்) கருத்துகளை கொண்டு இந்த கருத்தாய்வு முன்னெடுக்கப்படுகின்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .