2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உங்கள் பிள்ளையின் உயர் கல்விக்கு ‘பாதுகாப்பான முதலீட்டை உறுதி செய்யுங்கள்’

Editorial   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதுடன், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது என்பது ஒவ்வொரு பெற்றோரின் பிரதான எதிர்பார்ப்பாகும்.

தமது பிள்ளைகள் கல்வியில் சிறப்பாக தேறி, எதிர்காலத்தில் சிறந்த நிலையில் காணப்படுவதை காண ஒவ்வொரு பெற்றோரும் கனவு காண்கின்றனர். இருந்த போதிலும், அவர்களின் உயர்கல்வியை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதியை பெற்றுக் கொடுப்பது பெற்றோருக்கு காணப்படும் மாபெரும் சவாலாக அமைந்துள்ளது.

உள்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக, அதுவும் மாபெரும் சவாலாக அமைந்துள்ளது.

இந்த சவால்களுக்கு மத்தியில், ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் கனவை நனவாக்கிட தம்மாலான இயன்ற பங்களிப்பை அர்ப்பணிப்புடன் மேற்கொள்கின்றனர்.  

யூனியன் அஷ்யூரன்ஸ் உயர் கல்வித் திட்டங்கள் பெற்றோர்களுக்கு காணப்படும் சிறந்த தீர்வாக அமைந்துள்ளதுடன், குறிப்பாக தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை திட்டமிடுபவர்களாயின், அவர்களின் உயர் கல்வியை தொடர்வதற்கு இந்த முதலீட்டுத் தீர்வுகள் சிறந்த தீர்வாக அமைந்துள்ளன.

உங்களின் தேவைளுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய புத்தாக்கமான மற்றும் சௌகரியமான உயர் கல்வி முதலீட்டுத் தீர்வுகள் உங்கள் பிள்ளைகளின் கனவை நனவாக்கிட பெருமளவு பங்களிப்பை வழங்கும்.  

யூனியன் அஷ்யூரன்ஸின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி கசுன் சமீர கருத்துத் தெரிவிக்கையில், “நிதிச் சிக்கல்கள் மற்றும் கல்வித்துறையில் காணப்படும் போட்டிகரத்தன்மை போன்றன காரணமாக தமது பிள்ளைகளுக்கு சிறந்த உயர் கல்வியை பெற்றுக் கொடுப்பது எப்போதும் சவாலான விடயமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக நாம் அவர்களுக்கு அவசியமான வழிகாட்டல்களையும் நிதிசார் உதவிகளையும் வழங்க தீர்மானித்தோம். எனவே, உங்கள் பிள்ளையின் உயர் கல்விக்கு அவசியமான பாதுகாப்பான முதலீட்டை அன்புடன் மேற்கொள்வது எனும் தகவலை நாடு முழுவதும் நாம் கொண்டு செல்லும் எமது பயணத்தில் உங்களையும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்” என்றார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .