2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உயர் டிஜிட்டல் பயிலல் சூழலை ஏற்படுத்தியுள்ள SLIIT இன் Eduscope Lecture Video Management System

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, கல்விச் சேவைகளை வழங்கும் நிலையங்களுக்கு, மாணவர்களுக்கு தடையின்றி கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தொழில்நுட்பமுறைகளைப் பயன்படுத்தத் தூண்டியுள்ளன. SLIITஇன் Eduscope Lecture Video Management System (LVMS) SLIIT என்பது, நிலையத்தின் ஒன்லைன் கற்கைகளைத் தொடர்வதற்கான சிறந்த தொழில்நுட்பமாக அமைந்துள்ளது.

SLIIT இன் மனிதநேயங்கள் மற்றும் விஞ்ஞானங்கள் பிரிவின் பீடாதிபதி கலாநிதி. மலித விஜேசுந்தரவின் கண்டறிதலாக அமைந்துள்ள LVMS கட்டமைப்பு, SLIIT இன் இணை நிறுவனமான Eduscope எனும் ஆய்வு மற்றும் விருத்தி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Eduscope நிறுவனம், அந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டின் போது முதலாவது Lecture Capture Appliance தீர்வை அறிமுகம் செய்திருந்தது. 2019 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் கல்வி மற்றும் பயிலலுக்கான e-Swabhimani விருதை Eduscope வெற்றியீட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், Eduscope தனது முதலாவது வணிக ஓடரை SLIIT இடமிருந்து பெற்றுக் கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்பட்ட விரிவுரைகள் பதிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு LVMS ஊடாக பொருளடக்கங்களை மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, LVMS தொழில்நுட்பத்தினூடாக எழக்கூடிய சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய நிலைக்கு உயர்ந்தது.

தமது வீடுகளிலிருந்தவாறு கல்விச் செயற்பாடுகளை தொடர்ந்த மாணவர்களின் பிரதான கல்வித்திறவுகோலாக Eduscopeஇன் LVMS திகழ்ந்தது. 2020 மே மாதத்துடன் நிறைவடைந்த 10 வார கால ஊரடங்கு நிலையின் போது, 2800க்கும் அதிகமான வீடியோ மூலமான விரிவுரைகள் கட்டமைப்பினுள் பதிவேற்றப்பட்டதுடன், 9700 மாணவர்கள் இவற்றைப் பார்வையிட்டிருந்தனர். இதனூடாக சுமார் 480,000 பார்வைகளை எய்தியிருந்தன. இதில் 20 சதவீதமான பார்வைகள் ஸ்மார்ட்ஃபோன் போன்ற மொபைல் சாதனங்களினூடாக அமைந்திருந்தன. 

Eduscope Lecture Capture தீர்வு என்பதனூடாக, dual-channel பதிவு பெறப்படுவதுடன், சுயாதீனமான முறையிலும், கணனி திரையிலும் Full - High Definition (FHD) காட்சியமைப்பில் இவற்றை பார்வையிடக்கூடியதாக இருக்கும்.

SLIIT இன் மனிதநேயங்கள் மற்றும் விஞ்ஞானங்கள் பிரிவின் பீடாதிபதி கலாநிதி. மலித விஜேசுந்தர கருத்துத் தெரிவிக்கையில், “தற்போதைய Learning Management System (LMS) கட்டமைப்பை நான் சுமார் 15 வருடங்களுக்கு முன்னதாக SLIIT இல் அறிமுகம் செய்திருந்தேன். எவ்வாறாயினும், LMS இனால் வீடியோக்கள் முறையாக கையாளப்பட முடியாது. வீடியோக்களை சேகரித்து வைப்பதற்கு அதிகளவு இடவசதி தேவைப்படுவதுடன், மாணவர்களுக்கு ஸ்ரீம் செய்வதற்கு விசேட வழிமுறைகள் தேவைப்படுகின்றன. இதன் போது LVMS முக்கியமான அங்கம் வகிக்கின்றது. சகல மாணவர்களுக்கும் ஒப்பற்ற அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன” என்றார்.

நுனரளஉழிந இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரமாதி அதபத்து கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் உயர் கல்விக் கட்டமைப்பில் இது முதலாவது அறிமுகமாகும். இதில் அங்கம் வகிப்பதையிட்டு Eduscope பெருமை கொள்கின்றது. இந்தப் பயணத்தில் உதவியளிப்பதற்கு SLIIT க்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .