2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலகத் தரம் வாய்ந்த Samsung காட்சியறை அங்குரார்ப்பணம்

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

Softlogic நிறுவனம்,  Samsung நிறுவனத்துடன் கைகோர்க்கும், தமது  முதலாவது புதுஅனுபவம் தரக்கூடிய உயர் தரத்தினாலான காட்சியறையை  சொப்ட்லொஜிக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷோக் பதிரகே, சம்சுங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹன்பி. பார்க் ஆகியோரால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.  

இக்காட்சியகமானது இல. 14, டீ. பொன்சேகா இடம், கொழும்பு -5 இல்  அமையப்பெற்றுள்ளதோடு, கொள்வனவு வலைமையப்பைக் கொண்ட Softlogic Retail (Pvt) Ltd. நிறுவனத்துடன் இணைந்து இக்காட்சியறை இயக்கப்படுகின்றது.  

பூரண உரிமம் கொண்ட துணை நிறுவனமான சொப்ட்லொஜிக் ஹோல்டிங் பீ.எல்.சீ நிறுவனமானது, சம்சுங் நிறுவனத்தின் உயர் மதிப்புள்ள பங்குதாரராக 2010 ஜூலை மாதம் முதல் செயற்பட்டு வருவதோடு, சம்சுங் விற்பனை நாமம் பொருந்திய உற்பத்திகளை, உயர் தரத்தில் பரீட்சிக்கக்கூடிய காட்சிப்படுத்தல்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தாலான அதிநவீன கொள்வனவு சேவைகளையும் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.  

சொப்ட்லொஜிக் Softlogic நிறுவனமானது சம்சுங் (Samsung) நிறுவனத்தின் தொலைக்காட்சிப்  பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மைக்ரோவேவ் அவன்,கையடக்கத் தொலைபேசிகள் போன்ற அனைத்து வகையான இலத்திரனியல் பாவனைப்  பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களையும் வழங்கி வருகின்றது.  

2,800 சதுர அடி பரப்புக் கொண்ட ‘சம்சுங் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்’ (Samsung Experience Store) காட்சியறையானது ஒரே கூரையின் கீழ், சகல பாவனைப் பொருட்களையும் வழங்கும், ஒரு புரட்சிகரமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. 

இதனது ‘ஸ்மார்ட் டெபிள் ப்ரொடக்ட்’ (Smart Table Product) பகுதியில் சம்சுங் நிறுவனத்தின் சகல  வகையான ஸ்மார்ட் அலைபேசிகள் மற்றும் Tablet காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு அவற்றைப் பரீட்சித்துப் பார்க்கக்கூடிய வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. அதி நவீன Samsung Galaxy S9, Galaxy S9+, Galaxy Note 8 மற்றும் சம்சுங்  அலைபேசிகளுக்கான அணிகலன்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.   

மேலும், இக்காட்சியறையில் காணப்படும் Samsung Gear VR Zone இல் பொருத்தப்பட்டுள்ள  வீ.ஆர் செயார் (VR Chair) முற்றிலும் வித்தியாசமான அதிவேக சினிமாப் பாணியிலான ஓர்  
அனுபவத்தை ‘ஹைட்ரோலிக்’ (Hydraulic) தொழில்நுட்பத்தின் மூலம் வழங்குகின்றது. இது இலங்கையின் முதன் முதலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு புது அனுபவமாகும்.  

தற்பொழுது சம்சுங் உற்பத்திப் பொருட்கள் நாடு முழுதும் அமைந்துள்ள சுமார்  
222 Softlogic Max, சொப்ட்லொஜிக் ஸ்டோர் காட்சியறைகளில் பெற்றுக்கொள்ள முடியும். 

மேலும், இவற்றில் சுதந்திர சதுக்கத்தில்  அமைந்துள்ள ஆர்கேட் காட்சியறை மற்றும் கொழும்பு-3, டுப்ளிகேஷன் வீதியில்  அமைந்துள்ள காட்சியறை என்பன சம்சுங் இலத்திரனியல் பாவனைப்பொருட்கள்,  வீட்டுப் பாவனைப் பொருட்கள் சகலவற்றையும் உள்ளடக்கிய பிரத்தியேகக் காட்சியறைகளாகக் காணப்படுகின்றன.

சொப்ட்லொஜிக் நிறுவனமானது, இன்று சந்தையில் உள்ள இலத்திரனியல் மற்றும் ஏனைய பாவனைப் பொருட்களை வழங்கக்கூடிய முன்னணி நிறுவனமாகத் திகழ்கின்றது.

சம்சுங் கனெக்டட் எக்கோ சிஸ்டம் மூலமாக தனியோர் அப்ளிகேசன் ஊடாக சம்சுங் நிறுவனத்தின் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள், வீட்டுப்பாவனைப் பொருட்கள், ஸ்மார்ட் அலைபேசிகள் பற்றிய அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இத்திறப்பு விழாவுக்குச் சமுகம் தந்த அதிதிகளுக்கு வழங்கியது.

பாவனையாளர்களுக்கு பயன்தரக்கூடிய வகையிலான, மானுட மய்ய அடிப்படையிலான உத்திகளை நோக்காகக் கொண்ட வாழ்க்கைத் தரத்தை மாற்றக்கூடிய அளவிலான பாவனைப் பொருட்களை வழங்குவதில் Samsung நிறுவனம் தனது கவனத்தைக் குவித்து வருகின்றது. 

தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள QLED மற்றும் UHD வகையிலான தொலைக்காட்சிகள் உயர் ரக விற்பனை நாமம் தாங்கிய நிகரற்ற தரத்தனாலான காட்சிப்படுத்தல்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.  

த ஸ்மார்ட் ஹோம் அப்ளயன்ஸஸ் ஸோன் Smart வீட்டுப்பாவனைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பகுதியில், அமைக்கப்பட்டுள்ள மாதிரி சமயலறைத் தொகுதியானது, இல்லத்தரசிகளை ஈர்க்கக்கூடிய வகையிலும், அவர்களின் சமயற்திறனைப் பரீட்சித்துப் பார்க்க தூண்டும் விதமாகவும் சம்சுங் இன் தாராளத்தன்மை வாய்ந்த இலகுவில் பயன்படுத்தக்கூடிய வகையிலான அதி உன்னதமான சமயலறைத் தொகுதியாகக் காணப்படுகின்றது.   

சம்சுங் எக்ஸ்பீரியன்ஸ் காட்சியறையானது, தனது வாடிக்கையாளர்களை வலுவூட்டும் நோக்கிலும் தெளிவூட்டும் தோரணையிலுமான ஒரு முழுமையான ‘லைப் ஸ்டைல்’ ஆலோசனை வழங்கும் நிலையமாகவும்  திகழ்கின்றது. இதில் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட பகுதி பகுதியாகத் தெளிவுபடுத்தும் ஆற்றல் கொண்ட ஆலோசகர்கள் காணப்படுகின்றனர்.   

இவ்வங்குரார்ப்பண நிகழ்வை முன்னிட்டு, வங்கி அட்டைகள் மூலம், முழுமையாகப் பணம் செலுத்தி கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விசேட விலைக்கழிவுகளை வழங்கப்படுகின்றன.  அத்தோடு, முன்னணி வங்கிகளின் கடன் அட்டைகளுக்கு இலகு தவணை முறையில், வட்டியில்லாக் கொடுப்பனவுகளில் பாவனைப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி வாய்ப்புகளும்  வழங்கப்படுகின்றன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .