2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஊரடங்கு காலப்பகுதியில் Zoom பயன்பாடு

Editorial   / 2020 மே 27 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரவீனா கிருபராஜ்

B.Sc (Hons) in Business Computing

இன்றைய நாள்களில் பலரும் Zoom கூட்டங்கள் (meetings), Zoom வகுப்புகள் பற்றிப் பேசுவதைக் கேட்கிறோம். கற்றற் செயற்பாடுகள் Zoom இல் நடைபெறுகின்றன. இது, ஒரு புதுவித அனுபவமாகும். Zoom செயலியானது, காணொளி மாநாட்டை (Video Conference) மேற்கொள்ளக் கூடிய வசதியை வழங்குகிறது.

பெரும்பாலான மாணவர்களுக்கு, இதுவரை பொழுது போக்காக இருந்த இணையத்தள பாவனை, தற்சமயம் கல்வியைப் பெறுவதற்கான அவசிய தேவையாக மாறியுள்ளது. மாணவர்கள், Zoom செயலி (Application) ஊடாக, ஆசிரியர்களோடு இணைந்து, வகுப்புப் பாடங்களைக் கற்கிறார்கள். இந்த ஊரடங்கு காலப்பகுதியில், இப்படிப்பட்ட ஒரு வழி அமைந்தது, மாணவர்களுக்கு மட்டுமல்ல தொழில் புரிவோருக்குமே, ஒரு விதத்தில் அனுகூலமாகக் காணப்படுகிறது. இந்தக் கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு மத்தியில், நண்பர்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும் Zoom பயன்படுத்தப்படுகிறது.

அண்மையில், அவுஸ்திரேலியாவில் வாழும் நண்பர் ஒருவர், இந்தக் கொவிட்-19 டழஉம னழறn காலப்பகுதியில், வீடுகளில் தனிமையில் வாழும் தமிழ் பேசும் முதியோரை, Zoom இல் இணைத்து, ஒரு வீடியோ மாநாட்டை நடத்தியிருந்தார். இது, வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி இருந்த அந்த முதியவர்களுக்கு, உள ரீதியான ஒரு நிவாரணத்தைக் கொடுத்திருந்தது.

Zoom இன் இலவச திட்டம், 100 பங்கேற்பாளர்கள் பங்குபற்றி, 40 நிமிடக் குழுக் கூட்டங்களை நடத்த அனுமதிக்கிறது. தற்சமயம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட, ஆரம்ப, இடைநிலைப் பாடசாலைகளுக்கான இலவச அடிப்படைக் திட்டத்துக்கான, 40 நிமிட நேர வரம்பை Zoom தற்காலிகமாக நீக்கியிருக்கிறது.

Zoom செயலியானது, பயன்படுத்துவதற்கு எளிதான முறையில் 

வடிவு மைக்கப்பட்டு ள்ளதுடன் கூட்டத்தில் இணைவதற்கு (Join meeting) உள்நுழைவு (login/Sign-in) தேவையில்லை. இவ்வாறு, இணைவது இலகுவானதுடன் இலவசமானதும் ஆகும். உங்கள் உலாவி (Browser) ஊடாக ஒரு கூட்டத்தில் (meeting) இணைய முடியும்; ஆனால், கூட்டத்தைக் கூட்டவும் (Schedule meeting/start meeting) அதன் வேறு சில வசதிகளை உபயோகிக்கவும், நீங்கள் Zoom Application ஐ கணினியிலோ தொலைபேசியிலோ பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்படிப் பதிவிறக்கம் செய்யும் போது, மின்னஞ்சலைத் தட்டச்சு செய்யும்படி கேட்கப்படுவீர்கள். நீங்கள் உபயோகிக்கும் மின்னஞ்சலைப் பதிவு செய்யலாம் அல்லது கூகிள் (Gmail), பேஸ்புக் கணக்குகள் மூலம் நுழையலாம்.

Zoom வீடியோ மாநாடுகளில் தரவு கசிவுகள் குறித்து, எச்சரிகையாக இருக்க வேண்டும். வீடியோ கூட்டங்களில் உங்களால் அழைக்கப்படாமல், உங்களை அறியாமல் இணையும், வேண்டப்படாத நபர்களால், உங்கள் தகவல்கள் திருடப்படக் கூடும். அவர்கள், இணைத்திருப்பது பங்காளர் (Participants) பெயர் பட்டியலில் தெரிவதில்லை. இது Zoom-bombing எனவும் அறியப்படுகிறது.

Zoom செயலி End-to-End Encryption எனும் முறையை உபயோகிக்கப்படுவதில்லை எனும் குற்றசாட்டு நிலவிவருகிறது. End-to-End Encryption எனும் நுட்ப முறையானது, ஒரு தகவலை அதற்கு உரியவர் தவிர, வேறு யாரும் தெரிந்துகொள்ள முடியாத வகையில், அத்தகவலை மறைபொருளாக அனுப்பிவைக்கும் சங்கேத முறையாகக் கருதலாம். பொதுவாக, இராணுவம் போன்ற அமைப்புகளால் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்துக்காகப் பயன்பட்டு வந்த இந்த நுட்பம், இணைய யுகத்தில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. ஒரு செய்தி அனுப்பிவைத்தால், அதற்குரியவர் மட்டும் அதைப் படிக்க முடியும். மற்றவர்களுக்கு, அந்தத் தகவல் கலைத்துப் போடப்பட்ட அர்த்தம் கொள்ள முடியாத குறியீடுகளாகவே தோன்றும்.

உலகத்தின் இந்த இருண்ட நேரத்தில், Zoom மிகப்பெரிய வெற்றியைக் தனதாக்கி உள்ளது என்றே சொல்லவேண்டும். மேலும், அது அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ளத் தொடர்ந்தும் முயற்சிக்கும் என்பது சந்தேகம் இல்லை. அப்படியாயின் பயனரின் தனியுரிமை, பாதுகாப்புக்கு Zoom முன்னுரிமை அளிக்க முற்பட வேண்டும். ஏனெனில், Zoom இன் போட்டி செயலிகளான Microsoft Team, Google meet ஆகியவை, தம்மைச் சந்தையில் நிலை நிறுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. பன்முகப்படுத்தப்பட்ட பயனர் வசதிகளையும் பாதுகாப்பு தரத்தையும் அப்போட்டிச் செயலிகள் உயர்த்தி வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .