2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊழியர்களை வாழ்த்தும் ஜோன் கீல்ஸ் குழுமம்

Editorial   / 2018 ஜூலை 09 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் குழுமம் 2017/18 இன் கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்குப் பங்களிப்பு செய்து, உயர் செயலாற்றுகைகளை வெளிப்படுத்தியவர்களை அதன் வருடாந்த தன்னார்வலரை அங்கிகரிக்கும் தினத்தன்று பாராட்டியது.  

ஊழியர் தன்னார்வம் என்பது ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூகப் பங்களிப்பு உபாய மார்க்கமாகும். ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு நிறுவனமான, ஜோன் கீல்ஸ் அமைப்பால் கொண்டு நடாத்தப்படும் பெரும்பாலான கருத்திட்டங்கள் தன்னார்வலர்களின் ஆதரவுடன் செயற்படுகின்றது. 

தன்னார்வாலர் விடுமுறைக் கொள்கை குறைந்த தடைகளுடன், கூட்டிணைந்த சமூகப் பொறுப்புச் செயற்பாடுகளுக்காக ஊழியர்களை விடுவிப்பதற்கு இயலுமானதாகையால், குழுமத்தின் தன்னார்வலர் வலையமைப்பால் ஊழியர்கள் அவர்களின் நாளாந்தப் பணிகளுக்கு அப்பால் சென்று, சமூக மற்றும் சுற்றாடல் பணிகளுக்கும் தங்கள் பங்களிப்பை வழங்குவதற்கு இயலுமானதாக்குகின்றது. 

திறன்சார் தன்னார்வம் மற்றும் நிர்வாக ஆதரவுகளில் பங்குபற்றுபவர்க்கு தன்னார்வலர்கள் கருத்திட்ட ஆதரவாளர்கள், பயிலுனர்கள் மற்றும் பயிற்றப்பட்ட உதவியாளர்கள் இருந்து வேறுபடுகின்றனர். 2017/18 ஆண்டு காலப்பகுதியில் அமைப்பால் 5,411 மணித்தியாளங்கள் பதிவு செய்யப்பட்ட, 1,398 நிகழ்வுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட கருத்திட்டங்களில், துறைசார்/ வியாபார மட்டத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டிணைந்த சமுகப் பொறுப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து 840க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்குபற்றினர்.   

ஒவ்வொரு வருடமும் தன்னார்வலர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக வருடாந்த ‘தன்னார்வலர் அங்கிகரித்தல் தினத்தில்’ அமைப்பின் தன்னார்வலர் கணிப்பீட்டு பொறிமுறையின் அடிப்படையில் ‘பிளாட்டினம்’, ‘தங்கம்’, ‘வெள்ளி’, ‘வெண்கலம்’ மற்றும் ‘சிறப்பு’ அடிப்படையில் அங்கிகரிக்கப்படுவர். 

அமைப்பின் விஞ்ஞான ஊக்குவிப்புக் கருத்திட்டத்தின் வெற்றியாளர்களான ஜோன் கீல்ஸ் ஆராய்ச்சியின் தலைவர் மற்றும் அந்த நிகழ்வின் ‘தங்கப்’ பெறுகையாளரான முதித சேனரத், தன்னார்வம் தொடர்பாகக் கூறுகையில், “ஒரு தன்னார்வலராக செயலாற்றியிருந்தமை எனக்குப் பெரும் உவகையூட்டுவதாக அமைந்தது. குறிப்பாக, கிராமப்புறங்களைச் சார்ந்த பிள்ளைகள் குறியீட்டு மொழியைப் பயன்படுத்தி, சிறு ரோபோக்களைக் கொண்டு, எளிய பணிகளைச் செய்வித்ததைக் கண்டு, திருப்தியடைந்தேன். இலங்கை பல்வகைத் திறமைகளைக் கொண்ட நாடு என்பதற்கு இது பெரும் சான்றாகின்றது. இத்தகைய திறமைகளை நாம் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த ஆரம்பிக்கும் தினமே, நம் நாட்டை மாற்றியமைப்பதற்கான முதற்படியாகும்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X