2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எடிசலாட் வலையமைப்பை கையகப்படுத்தும் Hutch லங்கா

Editorial   / 2019 ஜூன் 06 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

Hutchison டெலிகொமியுனிகேஷன்ஸ் லங்கா லிமிடெட் (Hutch லங்கா), எடிசலாட் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

1997ஆம் ஆண்டு முதல் இலங்கையில் Hutch லங்கா தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், ஹொங் கொங்கை தளமாகக் கொண்டு இயங்கும் Fortune 500 நிறுவனங்களில் ஒன்றான C K Hutchison குழுமத்தின் துணை நிறுவனமாகவும் திகழ்கின்றது. Hutch லங்காவின் தாய் நிறுவனமான CK Hutchison ஹோல்டிங்ஸ் லிமிடெட், புகழ்பெற்ற பல்தேசிய நிறுவனமாக இயங்குவதுடன், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதில் தன்னை அர்ப்பணித்து உலகளாவிய ரீதியில் இயங்கி வருகின்றது.
இந்த கையகப்படுத்தலை தொடர்ந்து, இலங்கையில் எடிசலாட் லங்கா தனது செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளதுடன், Hutch லங்கா தனது சந்தை நிலையை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் தொடர்ந்தும் தனது வர்த்தக செயற்பாடுகளை Hutch எனும் நாமத்தின் கீழ் முன்னெடுக்கவுள்ளது.

இரு வலையமைப்புகளையும் ஒன்றிணைத்து இயங்கும் வியாபாரத்தினூடாக 078 மற்றும் 072 இலக்கங்களை கொண்ட தொலைபேசி வலையமைப்புகளை பயன்படுத்தும் சகல வாடிக்கையாளர்களுக்கும் உயர்தர தொடர்பாடல் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில், உயர் வலையமைப்பு தரம், வலையமைப்பு பரவல் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றை கிராமிய மற்றும் நகர மட்டத்தில் மேம்படுத்தி பெற்றுக் கொடுப்பதற்கு Hutch தன்னை அர்ப்பணித்துள்ளது. மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் தனது 4G சேவைகளை அறிமுகம் செய்திருந்ததுடன், நாடளாவிய ரீதியில் 072 இலக்க வாடிக்கையாளர்களையும் உள்வாங்கி வலையமைப்பு விஸ்தரிப்பு செயற்பாடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .