2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எயார்டெல் லங்கா நிறுவன வலையமைப்பு விஸ்தரிப்பு

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எயார்டெல் லங்கா நிறுவனம் நாட்டில் தனது தொழிற்பாடுகள் மீது மேலும் முதலீடுகளை மேற்கொள்ளும் முகமாக இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையுடன் ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை தொலைதொடர்பாடல் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் ஆதரவுடன் இந்த முதலீட்டு உத்தரவாத உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.   

எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜினேஷ் ஹெக்டே நிகழ்வில் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் முதலீடு செய்வதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டினையும், நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்பில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதையும் இந்த முதலீடு புலப்படுத்துகின்றது. வலையமைப்பு விஸ்தரிப்பு மற்றும் அதனுடன் இணைந்த நுண்ணுறிவு வலையமைப்பு மற்றும் மொபைல் புரோட்பான்ட் ஆகிய அதிநவீன மேம்பாடுகளை உள்ளிணைத்துக் கொள்வதற்கு எயார்டெல் நிறுவனத்துக்கு இது இடமளிக்கும். இலங்கையில் நாம் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள 0.5 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற தற்போதைய முதலீட்டின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன். இது நாட்டின் முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள் உலகத்தரம் வாய்ந்த தராதரங்களைக் கொண்டவையாக வளர்ச்சி காண உதவி, நாட்டின் சமூக-பொருளாதார அபிவிருத்திக்கு மேலும் பங்களிப்பாற்றும்”  என்று குறிப்பிட்டார்.  

இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் பணிப்பாளர் சபைத் தலைவரான துமிந்ர ரட்னாயக்க இது தொடர்பில் கூறுகையில், “எயார்டெல் இலங்கையில் முதலீட்டை மேற்கொள்வதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைவதுடன், அந்நிறுவனத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக அமைவதற்கு எமது வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டார்.   

கடந்த 18 மாதங்களாக எயார்டெல் இலங்கையில் மேற்கொண்டுள்ள வலையமைப்பு மேம்படுத்தல் நடவடிக்கைகள் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் இனங்காணல் அங்கிகாரத்தைச் சம்பாதித்துள்ளதுடன், நாட்டில் அதிவேகமான இணைய சேவைக்கான 3 ஆம் தர வலையமைப்பு சோதனைகள் மூலம் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுபேறாக, இலங்கையில் இணையம் தொடர்பான அறிவு கொண்ட இளைஞர், யுவதிகள் மத்தியில் இரண்டாவது பாரிய சேவை வழங்குநராக தற்சமயம் எயார்டெல் திகழ்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .