2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எல்.பீ. ஃபினான்ஸ் ‘பிரகதி’ கல்விக் கடன் பட்டப் படிப்புக் கனவை நனவாக்கும்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்வதற்கான வழியை மேலும் இலகுவாக்கக்கூடிய, மிகவும் வசதியான கல்விக் கடனை எல்.பீ ஃபினான்ஸின் ‘பிரகதி’ டிக்ரி கடன் திட்டம் இப்பொழுது வழங்குகின்றது.   

பதிவுக் கட்டணங்கள், கற்கை நெறிக் கட்டணங்கள், தங்குமிட கட்டணங்கள், விமானப் போக்குவரத்துச் செலவுகள் என்பன உட்பட உங்கள்  பட்டப் படிப்புத் தொடர்பாக ஏற்படும் அனைத்து நிதித் தேவைகளுக்கும் உதவும் வகையில் இக்கடன் திட்டம் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.   

ஆகவே, நீங்கள் உங்களது உயர் கல்விக் கனவை நனவாக்குவதற்கு எவ்வித நிதிப் பிரச்சினையும் இருக்காது.  

கல்விக் கடன் ஒன்றைப் பெறுவதற்குத் தீர்மானிக்கும் முன்னர், தற்கால மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் சிந்திக்கும் ஒரு முக்கிய விடயம், இக் கடனுக்கான மாதாந்தத் தவணைத் தொகை எவ்வளவாக இருக்கும்  என்பதைப் பற்றியதாகும்.   

ஆனால், எல்.பீ ஃபினான்ஸ் இந்தப் பிரச்சினைக்கு, மிகத் தெளிவான தீர்வை  
வழங்குகின்றது. ‘பிரகதி’ திட்டத்தின் கீழ் ரூ. ஒரு மில்லியன் கடனைப் பெற்றால், நீங்கள் ரூ.15,000 ஐ மட்டுமே மாதாந்தம் செலுத்த வேண்டியிருக்கும்.  

 எனவே, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது, சிறிது சிறிதாகக் கட்டிவிட்டு, எஞ்சிய தொகையைப் படிப்பை முடித்துத் தொழிலுக்குச் செல்லத் தொடங்கிய பின்னர் மீளளிக்கலாம்.  

‘பிரகதி’ கல்விக் கடன் திட்டம் அநேகமான சிறப்பு வசதிகளை வழங்குகின்றது. உதாரணமாக, நீங்கள் இக் கடனை, உங்கள் பெற்றோருடன் அல்லது வாழ்க்கைத் துணைவருடன் சேர்ந்து கூட்டுக் கடனாக பெறவும் முடியும்.  

ஆகக்கூடுதலான கடன் தொகை, நெகிழ்வான மீளளிப்புத் திட்டங்கள் என்பன ஏனைய நன்மைகளாகும்.  எந்தவோர் உள்நாட்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திலும் அல்லது உயர் கல்வி நிலையத்திலும் பட்டப்படிப்பை  மேற்கொள்வதற்கு அல்லது CIMA, CIM, SLIM, AAT, IPM, Fashion degrees, MBA போன்ற தொழில்சார்  தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு, இக்கல்விக் கடனைப் பெற்றுக்கொள்ளலாம்.  

2017ஆம் ஆண்டு நடைபெற்ற Interbrand Best Sri Lankan Brands நிகழ்வில் இலங்கையின் 20 தலைசிறந்த வர்த்தகப்  பெயர்களில் ஒன்றாக எல். பீ ஃபினான்ஸ் தெரிவு செய்யப்பட்டது. 

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு நிதி மற்றும் லீசிங் நிறுவனம் எல். பீ ஃபினான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.   

இலங்கையில் நிதி மற்றும் லீசிங் சேவைகள்  துறையில் எல். பீ. ஃபினான்ஸ் முதலிடம் வகிக்கிறது என்பதற்கு இது சான்றாகும். ஃபிச் ரேட்டிங்ஸ் அமைப்பு (A-) என்ற  தரப்படுத்தலை வழங்கியிருப்பது நிறுவனத்தின் நிதி உறுதிப்பாட்டை மேலும் எடுத்துக்காட்டுகின்றது.  

எல். பீ ஃபினான்ஸ், கடந்த 46 ஆண்டுகளுக்கு மேலாக நாடு முழுவதிலும் சகல தரப்பு மக்களுக்கும் தரமுயர்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.   

அதனால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுள் குத்தகை வசதி, வீடமைப்புக்  கடன்கள், கல்விக் கடன்கள், தனிப்பட்ட கடன்கள், தங்கக் கடன்கள், நுண்ணளவு நிதியுதவி, இஸ்லாமிய நிதிச் சேவைகள், வெஸ்டர்ன் யூனியன் பணப் பரிமாற்றம், சிறுவர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக் கணக்குகள்  என்பனவும் உட்படும்.  

‘எல்.பீ ஃபினான்ஸ் வழங்கும் ‘பிரகதி’ கல்விக் கடன் என்பது, கல்விக்கான நிதியுதவித் துறையில் தனித்துவமான  திட்டமாகும்.   

மாணவர்கள் தமது உயர் கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்ளவும் மற்றையோர் மேலதிக தகைமைகளைப் பெற்றுத் தொழில் நிலையில் முன்னேறவும் கைகொடுத்து உதவும் இத்திட்டம், கல்வித் திறனும்  தொழிற் தகைமையும் வாய்ந்த சமுதாயத்தை இந்த நாட்டில் கட்டியெழுப்ப எல்.பீ ஃபினான்ஸின் பங்களிப்பாகும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .