2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஏறாவூர் பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம்

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையில் வழமையான இருதய சிகிச்சைகள் மற்றும் சத்திர சிகிச்சைகள், முதன்முறையாக அறிமுகப்படுத்தும் சிகிச்சை வசதிகள் என பல்வேறு சிகிச்சைகளை டேர்டன்ஸ் இருதய சிகிச்சை மையம் வழங்கி வருகின்றது.

சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களும் மருத்துவப் பராமரிப்பு வசதிகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, மட்டக்களப்பு நகரிலிருந்து வட-மேற்கில் 15 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய நகரமான ஏறாவூரில் இரு நாள் மருத்துவ சிகிச்சை முகாமொன்றை டேர்டன்ஸ் வைத்தியசாலை ஏற்பாடு செய்திருந்தது.  

இருதயம் சார்ந்த இந்த மருத்துவ சிகிச்சை முகாமானது ஏறாவூர் அல் முனீரா பெண்கள் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்றது. அல் முனீரா பெண்கள் பாடசாலையின் அதிபரான மொஹமட் மஹத் இந்த வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “இதில் கலந்து கொண்டு சேவைகளை வழங்கிய அனைவரும் ஆரம்பத்திலிருந்தே தீவிரமான அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

முதலாவது தினத்தில் 250 வரையான நோயாளர்கள் வருகை தந்ததுடன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்விதமான கட்டணங்களுமின்றி, இலவசமான உடல் நல மருத்துவ ஆய்வினை டேர்டன்ஸ் வைத்தியர்களும், பணியாளர்களும் இணைந்து மேற்கொண்டனர். இரத்த அழுத்த சோதனைகள், இரத்த சோதனைகள். உடல் பருமன் (BMI) சுட்டெண் கணிப்பீடுகள் போன்ற பல மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாவது தினத்தில் வைத்தியர்களின் நேரடி ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், பிரபல இருதய சிகிச்சை வைத்திய நிபுணர்களான வைத்தியர் டபிள்யூ. எஸ். சாந்தராஜ் மற்றும் வைத்தியர் ஷhனிகா கருணாரட்ண ஆகியோர் நோயாளர்களை நேரடியாக பார்வையிட்டு, தேவையான வைத்திய ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தனர்.   

ஏறாவூரில் இந்த அளவிற்கு பிரமாண்டமான வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டம் ஒன்று நடாத்தப்பட்டமை இதுவே முதன்முறை என்பதுடன், இதற்கு அப்பகுதி மக்களிடமிருந்து பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .