2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐரோப்பாவின் KTM மோட்டார் சைக்கிள் அறிமுகம்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

டேவிட் பீரிஸ் மோட்டார் (தனியார்) கம்பனி, ஐரோப்பாவின் மோட்டார் சைக்கிள் நாமமான KTM மோட்டார் சைக்கிளை, இலங்கையில் அறிமுகப்படுத்தி இருப்பதாக அறிவித்துள்ளது. 

KTM இன் பாரிய பந்தய அனுபவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் மாத்திரமன்றி, இது சந்தையில் உள்ள ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கிறது. 

2009ஆம் ஆண்டு முதல் KTM ‘டாகார்’ மோட்டார் பந்தயத்தின் சகல போட்டிகளையும் வெற்றிகொண்டிருப்பதுடன், 270ற்கும் அதிகமான உலக சம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்று கௌரவத்தைச் சேர்த்துள்ளது.   

புகழ்பெற்ற பந்தய சாதனைகளுக்கு அப்பால், KTM ஆனது ஐரோப்பாவின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் என்பதுடன், off-road பிரிவில் உலகளாவிய ரீதியில் ஆதிக்கம் செலுத்திவருகிறது.

 KTM தனது உயர் மதிப்புள்ள வீதி மோட்டார் சைக்கிள் நாமமான சுப்பர் ஸ்போர்ட்ஸ் RC ரக மோட்டார் சைக்கிள்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் முறையே 200, 250 மற்றும் 390 இயந்திர வலுக்களைக் கொண்டதாக அமைந்துள்ளன.

 முதற்கட்டமாக இல. 753, பன்னிப்பிட்டிய வீதி, பத்தரமுல்லை என்ற முகவரியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள KTM காட்சியறையின் ஊடாக, இந்த மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படும். 

விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதற்காக, தனித்துவமான விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் பழுதுபார்த்தல் வேலைத்தளமானது DPMC ஹைட்பார்க் கோனரில் அமைக்கப்பட்டுள்ளது.

 KTM அறிமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிராந்திய விற்பனை முகாமையாளர் லக்மல் டி. சில்வா, “DPMC குடும்பத்துக்கு மற்றுமொரு உலகத் தரம் வாய்ந்த வர்த்தகநாமம் ஒன்றை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதுடன், குறிப்பாக மோட்டார் சைக்கிள் உலகத்தில் மிகவும் மதிக்கப்படும், அங்கிகாரம் பெற்ற பெயரைக் கொண்டுள்ள KTM போன்ற உற்பத்தியை வரவேற்பதில் பெருமையடைகிறோம். மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர் என்ற ரீதியில் நாம் எப்பொழுதும் வடிவமைப்பு மற்றும் நீடிப்புத் தன்மையில் புத்தாக்கமான அணுகுமுறைகளையே எதிர்பார்க்கின்றோம். நாம் KTM ஐ எதிர்கொண்டபோது, அதற்கான முக்கியத்துவத்தை உடனடியாக அடையாளம் கண்டோம். மோட்டார் பந்தயத்துக்கான அம்சங்களை இது கொண்டிருப்பதுடன், சுப்பர் ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அமையும், இவ்வாறான பெருமைக்குரிய மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் தனித்துவமான இலங்கை பங்காளராக இணைவதில் பெருமைப்படுகிறோம்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .