2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹாபிக் மக்கள் ஆரோக்கிய திட்டம்

S.Sekar   / 2021 மார்ச் 04 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமானநிலையம் மீண்டும் வெளிநாட்டு பிரயாணிகளுக்காக திறக்கப்பட்டதால், நம் நாட்டிற்கு வருவோரின் பொதுசுகாதார வசதிகளை கட்டுப்பாடுகளுக்கமைய மீளமைக்க அதன் முகாமைத்துவம் உடனடியாக செயற்பட்டது. விமான நிலையத்தினூடாக இந்நாட்டிற்குள் வருவோர் சாதாரண உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் சுங்க செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதால், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது பெரும் சவாலான விடயமாக அமைந்திருந்தது.

பல வருடங்களாக இலங்கையரின் பொதுசுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் 'ஹாபிக் மக்கள் ஆரோக்கிய திட்டம்', விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவோரின் பொதுசுகாதார வசதிகளை வழங்கிட முன்வந்தது. 'விமான நிலையம் மீண்டும் வெளிநாட்டவர்களுக்காக திறந்த பின் பொதுசுகாதாரத்திற்காக பல்வேறு மாற்றங்களை மிக குறுகிய காலத்தினுள் மேற்கொள்ளவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. இச் செயற்திட்டத்தின் போது நாம் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் வருவோரின் பொதுச்சுகாதார தேவைகளை பாதுகாப்புடன் மேற்கொள்வதற்கானதோர் திட்டத்தினை உருவாக்குவதாகும்.  நாம் கேட்டுக் கொண்டதற்கமைய ஹாபிக் உடனடியாக செயற்பட்டு, நடமாடும் பொது சுகாதார கட்டமைப்புகளை விமான நிலையத்தினுள் ஸ்தாபித்தமைக்கமைய இச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இச்சந்தர்ப்பத்தின் போது ஹாபிக் பொது சுகாதார திட்டம் எமக்கு பங்களித்தமைக்கு நாம் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்' என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனத்தின் தலைவர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .