2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடல் மாசுறல் தடுப்பு நடவடிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கடலில் காணப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனம் (UNOPS), கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை, மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சு ஆகியன இணைந்து சர்வதேச கடற்கரை சுத்திகரிப்பு வாரம் 2018ஐ முன்னிட்டு நீர்கொழும்பு - ப்ரீதிபுர பொது கடற்கரையை தூய்மைப்படுத்த முன்வந்திருந்தன.   

சர்வதேச கடற்கரைச் சுத்திகரிப்பு வார செயற்பாடுகள் செப்டெம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இலங்கையின் கடற்கரையோரங்களில் இந்த வார காலப்பகுதியில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப ட்டிருந்தன. 1.59 மில்லியன் டொன்கள் எடை கொண்ட கழிவுகள் நாட்டைச் சூழவுள்ள கடலில் வருடாந்தம் சேருகின்றன. 

இதில் சுமார் பத்து சதவீதமான கழிவுகள், கைவிடப்பட்ட மீன்பிடி சாதனங்களிலிருந்து வருகின்றன. பிளாஸ்டிக் உக்கி நுண் பிளாஸ்டிக்குகளாக மாறுவதற்கு சுமார் நூற்றுக் கணக்கான வருடங்கள் வரை தேவைப்படுவதுடன், இவை உணவுச் சங்கிலிக்கு அபாயகரமானவையாகவும் அமைந்துள்ளன.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்க் கருத்துத் தெரிவிக்கையில், 
“ஐரோப்பிய ஒன்றியத்தின் பிளாஸ்டிக்கள் தொடர்பான மூலோபாயக் கொள்கை, அரசியல் அர்ப்பணிப்பிலிருந்து, உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது. கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதுடன், பாதுகாப்பான கடல்களைப் பேண வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பங்களிப்பை வழங்கி வருகிறது. 
சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தை முன்னிட்டு, உலகளாவிய ரீதியில் வெவ்வேறு நாடுகளில் காணப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினரால் கரையோர தூய்மையாக்கல் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“இந்நிலையில், இலங்கையிலும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதையிட்டு, நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடலில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கும், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கரையோர சமூகங்களைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பதற்கும் உடனடியான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .