2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கண்டியில் ANC கல்வியகம்

Editorial   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விசார் கூட்டுக்குழுமமான ANC, தனது குறிக்கோளை விருத்தி செய்யும் திட்டத்தின் ஓரங்கமாக கண்டியில் தனது முதலாவது கிளை வளாகத்தை அண்மையில் திறந்திருந்தது.

1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்கும் ஆற்றல் கொண்ட இவ்வளாகம், விஸ்தீரணமான, குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், கணனிக்கூடங்கள், அதி நவீன நூலகம், மாணவர்களுக்கான வரவேற்பறை மற்றும் மாணவர்கள் கூடுவதற்கான வெளிகள் எனச் சிறந்த கற்கைக்கான அதிநவீன வசதிகள் யாவற்றையும் கொண்டிருக்கின்றது.

அத்துடன், அதனுடன் இணைந்துள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் நூலகங்களுக்கான ஒன்லைன் மூலமான இணைப்பைக் கொண்டிருப்பதோடு கரும்பலகைக் கற்கைநெறி முகாமைத்துவ முறைமையையும் கொண்டிருக்கின்றது.  

கண்டியில் திறக்கப்பட்டுள்ள இப்புதிய கிளை, மாணவர்களுக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து,  ஐரோப்பிய நாடுகளில் பூர்த்திசெய்வதன் மூலம் தமது எதிர்காலக் கனவை நிறைவேற்றுவதற்கேதுவான வகையில் தேவையான தகவல்களைத் திரட்டவும், அவற்றைப் பெறுவதற்காகக் கொழும்புக்கு வருவதால் ஏற்படும் அலைச்சல் மற்றும் சிக்கல் என்பனவற்றையும் தவிர்க்கின்றது.

இந்நிறுவனத்தின் உற்பத்தி வரிசையானது, பிரதான பிராந்திய கேந்திர நிலையமான கண்டிக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்பதாலேயே கிளை வலையமைப்பு ஒன்றைக் கண்டியில் நிறுவும் ANCஇன் திட்டமானது அமுல் செய்யப்பட்டது.

பாடசாலையை விட்டு விலகியோர் முதல் உயரதிகாரிகள் வரை, உலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களிடமிருந்து தகைமைகள், பட்டங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவிருக்கும்.

“கண்டியை எங்களது முதலாவது கிளையாகக் கொண்டு, எமது விஸ்தரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்” என ANC இன் பிரதம நிறைவேற்றதிகாரியும், நிறைவேற்றுப் பணிப்பாளருமான கலாநிதி புனர்ஜீவ கருணாநாயக்க கூறினார். மேலும் குறிப்பிடுகையில், “வெளிநாட்டில் கல்வி கற்பதென்ற தேர்வு இலங்கை மாணவர்களிடையே தற்போது மிகுந்த பிரபலம் அடைந்துள்ளது. அவ்வாறான மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான சகல வளங்களையும் கொண்ட பெயர் சொல்லும் வரலாற்றைக் கொண்டவர்கள் நாங்கள்” என்றார்.  

ANC Kandy Campus இல் உள்ள 30 க்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க ஊழியர்களில் வருகை தரு விரிவுரையாளர்கள், துறைசார் நிபுணத்துவம் பெற்றோர் மாணவர்களின் கல்விக்கனவு பூர்த்தி செய்யப்படுகின்றதா? அவர்கள் நாளைய தலைவர்கள் ஆகின்றார்களா என்பதையும் ஊர்ஜிதப்படுத்துகின்றனர்” என ANC இன் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான அருணி மஹிபால கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X